இன்றைய (15.01.2020) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ…
மேஷம் : உங்கள் செயல்களில் கவனம் தேவை. இன்று கவனமாக பேச வேண்டும். முக்கியமான முடிவுகளை இன்று எடுக்க வேண்டாம்.
ரிஷபம் : உங்கள் பேச்சில் கவனம் தேவை. இல்லையென்றால் தேவையில்லாத வாக்குவாதம் ஏற்படும். விட்டுக்கொடுத்து செயல்பட வேண்டிய சூழல் உருவாகும். எதனையும் பெரிதாக எடுத்துக்கொள்ளவேண்டாம்.
மிதுனம் : இன்று மிகவும் மகிழ்ச்சியான நாளாக இருக்கும். உங்கள் செயல்களை கவனமாக செய்வீர்கள். உங்கள் நண்பர்களின் ஆதரவைப் பெறுவீர்கள்.இன்றைய நாளை நன்கு பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
கடகம் : இன்று நீங்கள் பதட்டத்தை சமாளிக்க அமைதியான சமநிலையான அணுகுமுறை தேவை. திருப்தியான மன நிலை ஏற்பட மனதை அமைதியாக வைத்து கொள்ள வேண்டும்.
சிம்மம் : இன்று தேவையில்லாமல் சில வாக்குவாதங்கள் ஏற்படலாம். அந்த வாக்குவாதம் உங்களுக்கு கவலையை அளிக்கும். அமைதியாக இருப்பது உங்களுக்கு நல்லது.
கன்னி : இன்று உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்காது. பொறுமை உங்களுக்கு நல்லபலனை தரும். எதையோ இழந்தது போன்ற உணர்வு ஏற்படும். தியானதத்தில் ஈடுபடுவது மூலம் மனஆறுதல் கிடைக்கும்.
துலாம் : இன்று உங்களுக்கு சிறப்பான நாள். உங்கள் சுய முயற்சி மூலம் வளர்ச்சியை காண்பீர்கள். உங்களிடம் காணப்படும் மன உறுதியும் மற்றும் விடாமுயற்சியும் வெற்றியை தேடி தரும். பிறருடனான தொடர்பு நன்கு பலப்படும்.
விருச்சிகம் : இன்று நன்றும் தீமையும் கலந்து காணப்படும். உங்கள் பெற்றோரின் ஆதரவு கிடைக்கும். அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும். திருப்தியுள்ள நாளாக இன்று இருக்கும்.
தனுசு : ஆன்மீக சொற்பொழிவுகளை கேட்பது, இறைவனை வழிபாடுவது போன்றவற்றால் இன்று மனஆறுதல் கிடைக்கும். கவனமுடன் பேச வேண்டும். இன்று எந்த நண்பர்களையும் சந்திப்பதை தவிர்க்கவும்.
மகரம் : இன்று எளிய பணிகள் கூட கடினமாக இருப்பது போல தோன்றும். சுறுசுறுப்பு இல்லாதது போன்ற உணர்வு ஏற்படும். ஓய்வெடுக்க வேண்டிய நாள்.
கும்பம் : இன்று உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும். இன்று புதிய நண்பர்களை பெற்று கொள்வீர்கள். மற்றவர்களுடன் பேசும் போது மகிழ்ச்சி கிட்டும்.
மீனம் : இன்று உங்களுக்கு அதிர்ஷ்டம் உள்ள நாள். உங்கள் முயற்சி வெற்றியில் முடியும். புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி இன்றைய நாளை சிறப்பனதாக மாற்றிவிடுவீர்கள்.