இன்றைய நாள் (15.06.2020) உங்களுக்கு எப்படி இருக்கும்? இதோ உங்களுக்கான ராசி பலன்கள்!

Default Image

உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ…

மேஷம் : இன்றைய நாள் சற்று மந்தமாக இருக்கும். சவால்கள் இருக்கும் நாள். இறைவனை வழிபடுவது வெற்றியை தேடித்தரும்.

ரிஷபம் : இன்று உங்களுக்கான நாள். உங்களது புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி நீங்கள் வெற்றிகளை குவிக்கலாம். கடின உழைப்பு நல்ல பலனை தரும்.

மிதுனம் : இன்றைய நாள் வளமானதாக இருக்கும். உங்கள் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள்.

கடகம் : வெளியூர்களுக்கு அல்லது வெளியிடங்களுக்கு செல்லும் சூழல் உருவாகும். உணர்ச்சிவசப்படுதலை கட்டுப்படுத்தி யதார்த்தமாக நடந்துகொள்ளவேண்டும். பொறுமையை கையாள வேண்டிய நாள்.

சிம்மம் : இன்று நீங்கள் அமைதியான அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும். பதட்டமான சூழ்நிலை காணப்படும். குலதெய்வத்தை வணங்குங்கள்.

கன்னி : இன்றைய நாள் உங்களுக்கு சிறப்பானதாக அமையும். நீங்கள் செய்பவை வெற்றியில் முடியும். நட்பு வட்டாரம் பெருகும். உற்சாகமாக காணப்படுவீர்கள்.

துலாம் : இன்றைய நாள் சிறப்பானதாக இருக்கும். நீங்கள் எடுக்கும் முக்கிய முடிவுகள் நல்ல பலனை தரும். எந்தவித சூழ்நிலையையும்  சமாளிக்கும் மன தைரியம் இன்று உங்களிடத்தில்காணப்படும்.

விருச்சிகம் : இன்று நீங்கள் சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். அதிகமாக யோசிக்க வேண்டாம். சிலநேரம் பாதகமான சூழ்நிலைய நீங்கள் எதிர்கொள்ள வேண்டி இருக்கும். அதனால் கவனமாக செயல்பட வேண்டும்.

தனுசு : இன்றைய நாள் சற்று மந்தமாக இருக்கும். உணர்ச்சிவசப்படுவீர்கள். ஆதலால், இன்று முக்கிய முடிவுகள் எதுவும் எடுக்க வேண்டாம்.

மகரம் : இன்றைய நாளில் நீங்கள் மிகவும் துடிப்பாக காணப்படுவீர்கள். நம்பிக்கையுடன் இருப்பீர்கள். மனம் சமநிலையோடு இருக்கும். அது உங்களுக்கு வெற்றியை தேடி தரும்.

கும்பம் : எதனையும் எதிர்பார்த்து இன்று இருக்காதீர்கள். உங்களுக்கான சில சௌகரியங்கள் பறிபோகும் நாள். நட்பு வட்டாரத்தை பெருக்கி கொள்ள முயற்சி செய்யுங்கள். பொது விழாக்களில் கலந்து கொள்ளுங்கள்.

மீனம் : இன்றைய நாள் உங்களுக்கு மந்தமாக அமையும். மன உறுதியுடனும் தைரியத்துடனும் செயல்படுவது முக்கியம். அமைதியாக இருக்க வேண்டிய நாள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்