இன்றைய நாள் (11.07.2020) எப்படி இருக்கும்? இதோ உங்களுக்கான ராசி பலன்கள்!
உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ…
மேஷம் : இன்று உங்களுக்கு சாதகமான நாளாக இருக்காது. எதையோ இழந்தது போல உணர்வீர்கள். பொறுமையை கையாள வேண்டும்.
ரிஷபம் : வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும் நாள். தன்னம்பிக்கை அதிகமாக இருக்கும். முக்கிய முடிவுகளை எடுக்க ஏற்ற நாள். நீங்கள் கொண்டாடும் சூழ்நிலைகள் அமையும்.
மிதுனம் : உங்களது கடின உழைப்பு நல்ல பலனை தரும். முன்னேற்றம் உள்ள நாள். நல்லது நடக்கும்.
கடகம் : வெளியூர் செல்வது மன அமைதியை தரும். எதனையும் எதார்த்தமாக செய்திடுங்கள். அமைதியான அணுகுமுறை தேவை.
சிம்மம் : பிறருக்கு உதவி செய்வதற்காக இன்றைய நாளை பயன்படுத்திக்கொள்ளுங்கள். அதன் மூலம் உங்கள் மனம் மகிழ்ச்சியாக இருக்கும். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.
கன்னி : உங்கள் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சமநிலையோடு காணப்படுவீர்கள். நீங்கள் எடுக்கும் முடிவுகள் நல்ல பலனை தரும்.
துலாம் : நீங்கள் ஆற்றலுடன் காணப்படுவீர்கள். இன்றைய நாள் பயனுள்ளதாக இருக்கும். உங்களுக்கான சௌகரியங்கள் காணப்படும்.
விருச்சிகம் : சுமாரான பலன்களே கிடைக்கும் நாள். அதனால், எதார்த்தமான அணுகுமுறை தேவை. உங்களது சுய முயற்சி வெற்றியை தேடித்தரும்.
தனுசு : முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். கவனமுடன் செயல்பட வேண்டும். உணர்ச்சிவசப்படுதலை கட்டுப்படுத்த வேண்டும்.
மகரம் : இன்று உங்களுக்கு சாதகமான நாள். உங்கள் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். நீங்கள் எடுக்கும் முடிவுகள் உங்களுக்கு சாதகமாக அமையும்.
கும்பம் : தடைகள் காணப்படும் நான். இருந்தாலும், பொறுப்புடன் நீங்கள் சவால்களை எதிர்கொண்டால் வெற்றி பெறலாம்.
மீனம் : உங்களது பொருள் திருட்டு போக வாய்ப்பு உள்ளது. அதனால் நீங்கள் கவனமுடனும் விழிப்புடனும் இருக்க வேண்டிய நாள்.