இன்றைய நாள் (08.06.2020) உங்களுக்கு எப்படி இருக்கும்? இதோ உங்களுக்கான ராசி பலன்கள்

இன்று உங்களுக்கான ராசி பலன்கள் இதோ..
மேஷம் : சிந்தித்து உரையாட வேண்டும். வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம். அனுசரித்து செல்ல வேண்டிய நாள். எதனையும் எளிதாக எடுத்துக்கொள்ளுங்கள்.
ரிஷபம் :இன்றைய நாள் சற்று மந்தமாக இருக்கும். பொறுமையுடனும், விழிப்புடனும் இருக்க வேண்டிய நாள். முக்கிய முடிவுகளை இன்று எடுக்க வேண்டாம்.
மிதுனம் : வெற்றி கிடைக்கும் நாள். முக்கிய முடிவுகளை இன்று நீங்கள் எடுக்கலாம். நீங்கள் நேர்மறையான எண்ணங்களை கொண்டிருபீர்கள்.
கடகம் : இன்று முன்னேற்றமுள்ள நாளாக இருக்கும். முக்கிய முடிவுகள் எடுக்க ஏற்ற நாள். இன்று அமைதியுடனும், திருப்தியுடனும் இருக்க வேண்டும்.
சிம்மம் : இன்று உங்களுக்கு சிறப்பான நாள். உங்களது நேர்மையான முயற்சிக்கு வெற்றி கிடைக்கும். ஆன்மீகத்தில் ஈடுபடுவது மகிழ்ச்சியையும் மனதிருப்தியையும் தரும்.
கன்னி : இன்று சுமாரான பலன்களே கிடைக்கும். உங்கள் செயல்களில் சில தடைகள் காணப்படும். உங்களுக்கான சில சௌகரியங்களை இழக்க நேரிடலாம்.
துலாம் : உங்களது அன்றாட பணிகள் கூட கடினமாக இருக்கலாம். திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி கிடைக்கும். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.
விருச்சிகம் : இன்று நீங்கள் அதீத மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். முக்கிய முடிவுகள் எடுக்க ஏற்ற நாள். இன்று நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாக காணப்படுவீர்கள்.
தனுசு : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக அமையாது. உங்கள் வழக்கமான செயல்களை கவனமுடன் செய்ய வேண்டும். நன்கு யோசித்து பேச வேண்டும். பிரார்த்தனை செய்வது மனதிற்கு ஆறுதலை தரும்.
மகரம் : பொறுப்புகள் அதிகமாக இருக்கும். அதனால், இன்று பதட்டமுடன் காணப்படுவீர்கள். இன்று பாதுகாப்பில்லாதது போல உணர்வீர்கள். முக்கிய முடிவுகளை இன்று எடுக்க வேண்டாம்.
கும்பம் : தெளிவான மனநிலையோடு இன்று பணிகளை திறம்பட செய்து முடிப்பீர்கள். இன்று நடப்பவை உங்களுக்கு சாதகமாக அமையும்.
மீனம் : உங்களுக்கான விருப்பங்களை நிறைவேற்றி கொள்ள ஏற்ற நாள். உங்களது சிறு முயற்சிகள் உங்களுக்கு சாதகமான பலன்களை தரும். நண்பர்களின் நல்லாதரவு கிடைக்கும் நாள்.
லேட்டஸ்ட் செய்திகள்
”ஆங்கிலத்தில் கையெழுத்திடும் தமிழக அமைச்சர்கள்”.., தமிழில் போடக்கூடாதா? பிரதமர் மோடி கேள்வி.!
April 6, 2025
டார்கெட் முடிக்காத ஊழியர்கள்… நாயை போல் அலைய வைத்து கொடுமைப்படுத்திய தனியார் நிறுவனம்.!
April 6, 2025