இன்றைய (07.01.2020) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ…
மேஷம் : இன்று உங்களது கடின உழைப்பு வெற்றியை பெற்றுத்தரும். மனதை ஒருநிலைப்படுத்தி செயல்களை செய்யுங்கள்.
ரிஷபம் : இன்று உங்கள் வளர்ச்சியில் கவனம் தேவை. பிறரை நாடுவதை விட உங்கள் முயற்சி மற்றும் செயல்திறன் மீது நம்பிக்கை வைத்து செயல்படுங்கள்.
மிதுனம் : இன்று நீங்கள் செய்யும் செயல் உங்களுக்கு நல்லதை தரும். விரைந்து செயல்பட வேண்டும். சிந்தனை செய்ய வேண்டும். எதனை செய்யக்கூடாது என உணர்ந்து செயல்பட வேண்டும்.
கடகம் : இன்று உங்களுக்கு வாய்ப்புகள் வரும் நாள். அதனை நீங்கள் உருவாக்கி கொள்ளலாம். பயணங்கள் காணப்படும் அந்த பயணம் உங்களுக்கு நல்லதை கொடுக்கும்.
சிம்மம் : இன்று உங்களுக்கு பொறுப்புகள் நிறைய இருக்கும். திட்டமிட்டு அதனை திறமையாக செயலாற்றுவீர்கள்.
கன்னி : பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது உங்களை நிதானமாக செயல்பட வைக்கும். பொறுமையாக செயல்பட வேண்டும்.
துலாம் : இன்று உங்கள் வளர்ச்சி மீது கவனம் வைப்பீர்கள். மற்றவர்கள் உதவியை நாடுவதை விட உங்கள் செயல்திறன் மற்றும் திறமையை நம்பி செயல்படுங்கள்.
விருச்சிகம் : இன்று உங்களுக்கு சாதகமான நாள். முக்கிய முடிவுகளை இன்று நீங்கள் எடுக்கலாம். மகிழ்ச்சியாக இருக்கும் நாள்.
தனுசு : உறவுகளை சிக்கல் வராமல் பார்த்து கொள்ள வேண்டும். அதற்கான முயற்சியில் நீங்கள் ஈடுபட வேண்டும். புதிய உறவுகள் ஏற்பட சாத்தியம் உள்ளது. பொறுமை மிக அவசியம்.
மகரம் : வெளியிடங்களுக்கு செல்வது உங்களுக்கு மகிழ்ச்சியை தரும். எதனையும் உணர்ச்சிவசப்பட்டு செய்ய வேண்டாம். எளிதாக எதார்த்தமாக செயல்களை செய்யுங்கள். அமைதியை கடைபிடியுங்கள்.
கும்பம் : இன்று மிகவும் துடிப்பான சுறுசுறுப்பான நாள். உங்கள் வளர்ச்சிக்காக நீங்கள் எடுக்கும் எந்த ஒரு முயற்சியும் வெற்றியை கொடுக்கும்.
மீனம் : இன்று மகிழ்ச்சியை அனுபவிக்கும் நாள். உறுதியுடன் செயல்பட்டு வெற்றியை உங்களதாக்குங்கள்.