இன்றைய நாள் (01.05.2020) உங்களுக்கு எப்படி இருக்கும்? இதோ உங்களுக்கான ராசி பலன்கள்!
உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ…
மேஷம் : பொறுமையை கடைபிடிக்க வேண்டும். திட்டமிட்டு செயல்பட வேண்டும். உறுதியான அணுகுமுறைகள் தேவை.
ரிஷபம் : இன்று உற்சாகமான நாள். கொண்டாட்டமான நாள். மனதிருப்தி உள்ள நாள். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும் நாள்.
மிதுனம் : திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டாம். அதனால், சில பிரச்சினைகள் உண்டாகும். கவனமுடன் செயல்பட வேண்டும்.
கடகம் : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக அமையாது. பலன்கள் தாமதமாக வந்து சேரும். எதிர்பார்ப்புகளை வளர்த்துக்கொள்ளாதீர்கள். பிரார்த்தனைகள் மனஆறுதலை தரும்.
சிம்மம் : இன்று நீங்கள் பாதுகாப்பில்லாதது போல உணர்வீர்கள். இன்று சுமாரான நாளாகதான் இருக்கும். உங்கள் வளர்ச்சி குறித்து கவலைகள் உண்டாகும். இன்று அதிர்ஷ்டம் குறைவாகவே இருக்கும்.
கன்னி : இன்று உங்கள் சுய முயற்சி உங்களுக்கு வெற்றியை தேடிதரும்.
துலாம் : இன்று சுறுசுறுப்பான நாள். ஆற்றலுடன் காணப்படுவீர்கள். உங்கள் சொந்த முயற்சி வெற்றி பெரும். உங்கள் வாழ்வில் சில மாற்றங்கள் உண்டாகும். மகிழ்ச்சி தரும் நாள்.
விருச்சிகம் : இன்று மகிழ்ச்சி நிலையாக இருக்காது. வெளியிடங்களுக்கு செல்லுங்கள். அது மனஆறுதலை தரும்.
தனுசு : சோம்பல் உணர்வுள்ள நாள். மனகுழப்பம் அதிகமாக காணப்படும். மனக்குழப்பத்தை தவிர்த்து எந்த செயலையும் செய்யுங்கள்.
மகரம் : இன்றைய நாள் உங்களுக்கு மகிழ்ச்சியாக அமையும். இன்று நடக்கும் சம்பவங்கள் உங்களுக்கு சாதகமாக அமையும். கடினமான பணிகளும் எளிதாக முடியும். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும்.
கும்பம் : இன்று அதிர்ஷ்டமான நாள். இன்றைய இலக்குகள் எளிதாக நிறைவடையும். இன்று அனுசரித்து நடந்து கொள்வீர்கள்.
மீனம் : உங்களின் சுய முயற்சி உங்கள் வாழ்வில் அபாரமான வளர்ச்சிகளை பெற்றுத்தரும்.