இன்றைய (23.11.2019) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ…

Default Image

மேஷம் : உங்கள் முயற்சி வெற்றி அடையும். நீங்கள் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். சிலநேரம் நீங்கள் எதிர்பார்க்காத பலனும் கிடைக்கும்.
ரிஷபம் : இன்று கொஞ்சம் சுமாரான நாள். நம்பிக்கை குறைந்து காணப்படும். முக்கிய முடிவுகள் எதுவும் எடுக்க வேண்டாம், அதனால் பலன் கிட்டாது. மனதில் நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள்.
மிதுனம் : உற்சாகம் குறைந்திருக்கும் நாள். ஆகவே, உற்சாகத்தை அதிகப்படுத்த மனதை மகிழ்ச்சியாக வைத்திருங்கள். எதையும் திட்டமிட்டு செயல்படுத்துங்கள்.
கடகம் : இன்று உங்கள் விருப்பங்கள் நிறைவேறும் நாள். அதனால், இன்று முழுவதும் மகிழ்ச்சியாக காணப்படுவீர்கள். முக்கிய முடிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். வளர்ச்சியுள்ள நாள்.
சிம்மம் : கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். மனதில் அமைதியின்மை காணப்படும். தன்னம்பிக்கையுள்ள எண்ணங்களை வளர்த்துக் கொள்ளுங்கள். இன்றைய நாள் உங்கள் கையில்தான் உள்ளது.
கன்னி : நம்பிக்கை குறைந்து காணப்படும் நாள். நீங்கள் செய்யும் செயல்களை நேர்மையாக செய்யுங்கள். மன அழுத்தத்தை சமாளிக்க மகிழ்ச்சியான எண்ணங்களை வளர்த்து கொள்ளுங்கள். ஆன்மீகத்தில் ஈடுபடுவது, தியானம் செய்வது மிகவும் நல்லது.
துலாம் : இருப்பதைக் கொண்டு திருப்தியுடன் வாழவேண்டிய நாள். உங்கள் இலக்குகளை அடைய கடுமையான பயிற்சி அவசியம். முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம்.
விருச்சிகம் : நம்பிக்கையுள்ள நாள். முன்னேற்றத்திற்கு ஏதுவான நாள். மனதில் தைரியம் மற்றும் உறுதி அதிகமாக காணப்படும் நாள்.
தனுசு : நம்பிக்கை அதிகமாக காணப்படும். தைரியத்துடனும் உறுதியுடனும் செயல்களை செய்வீர்கள். முன்னேற்றம் உள்ள நாள். இன்று நீங்கள் தன்னம்பிக்கையுடன் இருப்பீர்கள்.
மகரம் : இன்று சாதாரணமான நாள். நீங்கள் செய்யும் செயல்களில் பொறுமை அவசியம் கடைபிடிக்க வேண்டும். திட்டமிட்டு செயல்பட்டால் கடினமான பணிகள் கூட எளிதாக மாற்றி கொள்ளலாம்.
கும்பம் : இன்று மந்தமான சூழ்நிலை நிலவும். மன தைரியம் சற்று குறைந்து காணப்படும். எதிர்மறையான எண்ணங்களை விடுத்து நேர்மறையான எண்ணங்களை மனதில் வைத்து செயல்களை செய்யுங்கள்.
மீனம் : முன்னேற்றம் உள்ள நாள். அதற்கு ஏற்ப நிறைய வாய்ப்புகள் உங்களை தேடி வரும். அதனை தவறாமல் பயன்படுத்தி கொள்ளுங்கள். உங்கள் தகவல் தொடர்பு மிகவும் உதவிகரமாக இருக்கும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 26122024
minister regupathy
Ind vs Aus - Boxing Day Test
FIR banned
Comrade Nallakannu - Tamilndu CM MK Stalin
Mutharasan - Vaiko - Nallakannu - MK Stalin - K Balakrishnan
Virat kohli argument with Australian player Sam konstas