வரலாற்றில் இன்று ((மார்ச் 2) ! சரோஜினி நாயுடு மறைந்த தினம் இன்று
சரோஜினி நாயுடு பிப்ரவரி 13-ஆம் தேதி ,1879-ஆம் ஆண்டு பிறந்தார். இவர் ஒரு பிரபலமான சிறுமுது அறிஞர், கவிஞர், எழுத்தாளர் ,சுதந்திரப் போராளி மற்றும் சமூக ஆர்வலர் ஆவார். இந்திய தேசிய காங்கிரசின் இரண்டாவது பெண் தலைவரும் உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதல் பெண் ஆளுனரும் ஆவார்.அவரது பிறந்த நாள் இந்தியாவில் மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது.
1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்தியா சுதந்திரம் பெற்றதற்குப் பிறகு அவர் உத்தரப்பிரதேசத்தின் ஆளுநராக பதவியேற்றார். இதன் வழியாக இந்தியாவின் முதல் பெண் ஆளுநரானார். மார்ச் 2 ஆம் தேதி , 1949-ஆம் ஆண்டு அன்று மாரடைப்பால் அவர் மரணமடைந்தார்.