இன்று உலக காற்று நாள்…!

Default Image
  • இன்று உலக காற்று நாள். 

இந்த உலகில் வாழும் ஒவ்வொரு உயிர்களுக்கும் காற்று என்பது மிகவும் அவசியமான ஒன்று. நமது கண்ணுக்கு தெரியாத காற்று, நாம் உயிர் வாழ்வதற்கு தேவையான முக்கியமான காரணிகளில் ஒன்று. இந்த காற்றை நாம் சற்று நேரம் சுவாசிக்கவில்லையென்றாலும், நமக்கு மூச்சி திணறல் போன்ற மூச்சு சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படும்.

இந்நிலையில், ஒவ்வொரு வருடமும், ஜூன் 15-ம் தேதி உலக காற்று நாளாக அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளை, ஐரோப்பிய காற்று ஆற்றல் ஆணையமும், உலகளாவிய காற்று ஆற்றல் மன்றமும் ஒரு நிகழ்ச்சியாக நடத்தி வருகிறது. இந்த நாள், காற்றாற்றலை கொண்டாடும் நாளாகும். சென்னை மெரினா கடற்கரையில், 2012 ஆம் ஆண்டு, காற்றாற்றலின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதற்காக விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

எனவே, நம்மால் முடிந்தவரை காற்றை மாசுபடுத்தக்கூடிய செயல்களில் ஈடுபடாமல், காற்றை தூய்மைப்படுத்தும் நடைமுறைகளை கைக்கொள்வோம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்