இன்று உலக இயற்கை வள பாதுகாப்பு நாள்…!

Default Image

இன்று உலக இயற்கை வள பாதுகாப்பு நாள்.

இயற்கை நமக்கு இறைவன் கொடுத்த வரம் என்று தான் சொல்ல வேண்டும். இந்த இயற்கையோடு இசைந்த வாழ்க்கை தான், ஆரோக்கியமான வாழ்க்கையாகவும், மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கையாகவும் காணப்படும். எனவே இயற்கையை பாதுகாக்க வேண்டிய கடமை மனிதனாய் பிறந்த ஒவ்வொருவருக்கும் உண்டு.

அந்த வகையில் ஒவ்வொரு வருடமும் ஜூலை 28-ஆம் தேதி உலக இயற்கை வள பாதுகாப்பு நாளாக கொண்டாடப்படுகிறது. இயற்கை வளங்களை பாதுகாப்பதற்காக பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு சங்கம் 1948-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. உலகத்தில் ஏற்பட்டிருக்கும் சுற்று சூழல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும், அதனால் ஏற்படும் சவால்களை உலகம் எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. ஆகவே இயற்கையை நாம் பாதுகாத்தால், இயற்கை நம்மைப் பாதுகாக்கும் என்கிற நோக்கில் இந்நாள் கொண்டாடப்படுகிறது.

இந்த நாளில் இயற்கை வளத்தை பாதுகாக்கும் நோக்கில் இயற்கை வளங்களின் அவசியம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடைபெறுவதுண்டு. நம்மை சுற்றி உள்ள இயற்கை வளம் மிக்க சோலைகள், காடுகள், மரங்கள், உயிரினங்கள், புல்வெளிகள், விளைநிலங்கள், ஆறுகள், ஏரிகள், நீர் வளங்கள் போன்ற அனைத்து இயற்கை வளங்களும் மாசு படாத வண்ணம் அவற்றை நாம் மேம்படுத்துவதற்கான பாதைகளை நோக்கி செல்ல வேண்டுமே தவிர, அவற்றை மாசுபடுவதற்கான பாதைகளை நோக்கி செல்லக்கூடாது.

இயற்கையை பாதுகாப்பது நம் ஒவ்வொருவருக்கும் உள்ள கடமை என்பதை அறிந்து கொண்டு செயல்பட வேண்டும். இயற்கை வளங்களை நாம் பாதுகாப்பதால், நாம் மட்டுமில்லாமல், நமக்கு பின்வரும் சந்ததியும் ஆரோக்கியமாக வாழ முடியும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்