இன்று உலக இடக்கை பழக்கமுடையோர் தினம்…!

Default Image

இன்று உலக இடக்கை பழக்கமுடையோர் தினம்.

நாம் நமது அன்றாட வாழ்வில், இடக்கை பழக்கமுள்ளவர்களை பார்த்திருப்போம். அந்த வகையில், ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 13-ஆம் நாள் உலக இடதுகைப் பழக்கம் உடையோர் நாளாக கொண்டாடப்படுகிறது. இந்த நாள் முதல் முதலில் 1976-ஆம் ஆண்டில் கொண்டாடப்பட்டது. இந்த நாளை,  “பன்னாட்டு இடக்கை பழக்கத்தவரின் நிறுவனம்” கொண்டாடி வருகிறது.

இந்த இடக்கை பழக்கம் உள்ளவர்கள் சமூகத்தில் சில சிரமமான சூழல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இப்பழக்கமானது ஒருவருக்கு பிறப்பிலேயே ஏற்படுகிறது. பொதுவாக மூளை மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது. அவை, மூளையம், மூளி சிறுமூளை மற்றும் நீள்வளைய மையவிழையம். இவற்றில் மூளையம் ஆகும்.

இரண்டு அரைக்கோள வடிவில் உள்ளது. இடதுபக்க அரைக்கோளம் உடலின் வலதுப்பக்க உறுப்புகளையும், வலதுப்பக்க அரைக்கோளம் உடலின் இடப்பக்க உறுப்புகளையும் இயக்குகின்றன. இதில் பெரும்பாலானோருக்கு இடப்பக்க அரைக்கோளம் சற்று மேலோங்கியதாக இருக்கும். இதனால் அவர்களுக்கு வலப்பக்க உறுப்புகள் சிறப்பாக செயல்படுகின்றன. ஆனால் ஒரு சிலருக்கு வலப்பக்க அரைக்கோளம் மேலோங்கி செயல்படுவதால் இடது கை பழக்கம் ஏற்படுகிறது.

சில பெற்றோர்கள் இடக்கைப் பழக்கமுள்ள குழந்தைகளை குழந்தைப் பருவத்திலேயே வலது கை பழக்கத்திற்கு மாற்றுவதற்கு முயற்சிகளை மேற்கொள்கின்றனர். ஆனால் இந்த பழக்கத்தை மாற்ற முயற்சிக்கும் போது அவர்களின் பேச்சிலும் பார்வையிலும் குறைபாடுகள் ஏற்படலாம் என்று அறிவியல் ரீதியாக கூறப்படுகிறது.

இந்த நாளானது, இடக்கை பழக்கமுள்ளவர்களை கௌரவிக்கும் நோக்கிலும், மனதளவில் அவர்களுக்கு ஏற்படும் தாக்கங்களை போக்கும் வண்ணமாகவும், இவர்கள் மத்தியில் போட்டி நிகழ்ச்சிகளை நடத்துவதும், கருத்தரங்குகள், கூட்டங்கள் நடத்துவது போன்ற நிகழ்வுகளில் ஈடுபடுகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்