இன்று உலக குருதி கொடையாளர்கள் நாள்…!
- இன்று உலக குருதி கொடையாளர்கள் நாள்.
உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனின் உடல் உறுப்புகளின் இயக்கத்திற்கும் மிகவும் முக்கியமான ஒன்று ரத்தம். இந்த ரத்தம் சரியான முறையில் உறுப்புகளை சென்றடையவில்லை என்றால் அந்த உறுப்புகளில் ஏதேனும் பாதிப்பு ஏற்படுகிறது.
விபத்தில் சிக்குபவர்கள், அறுவை சிகிச்சை மேற்கொள்பவர்கள் என பலருக்கும் இரத்தத்தின் தேவை ஏற்படுகிறது. இப்படிப்பட்டவர்களுக்கு உதவும் வண்ணம் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை இரத்த தானம் செய்ய தகுதியுடையவர் பலரும் இரத்த தானம் செய்து வருகின்றனர். இரத்த தானம் செய்வதால், பல உயிர்கள் காப்பாற்றப்படுகிறது.
இந்நிலையில் ஒவ்வொரு வருடமும் ஜூன் 14-ம் தேதி உலக குருதிக் கொடையாளர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. உலக சுகாதார நிறுவனம் ரத்ததானம் செய்வோரை சிறப்பிக்கும் விதமாக ஜூன் 14ம் தேதியை உலக குருதிக் கொடையாளர்கள் தினமாக கொண்டாடி வருகிறது. இந்த தினம் 2005-ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று ஏ,பி,ஓ இரத்த குழு அமைப்பை கார்ல் லாண்ட்ஸ்டெய்னெரின் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.