இன்று உலக கடல் தினம்!
ஒவ்வொரு ஆண்டும் ஜூன்-8ம் தேதி உலக கடல் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நாம் இந்த உலகில் வாழ்வதற்கு கடலும் ஒரு முக்கியமான ஒன்றாகும். கண்டங்களை ஒன்றிணைத்து வாணிபம் செய்யவும், கப்பல் மூலமாக ஏற்றுமதி இறக்குமதி செய்து நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தவும் கடல் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
உலக பெருங்கடல் தினம் ஆண்டுதோறும் ஜூன்-8ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிற நிலையில், இந்நிகழ்வை கொண்டாடுவது குறித்த கோரிக்கையை, 1992-ம் ஆண்டு, பிரேசிலின், ரியோ டி ஜெனிரோவில், நடைபெற்ற பூமி உச்சி மாநாட்டில் முதன்முறையாக கனடா முன்வைத்துள்ளது.
இதனையடுத்து, சில ஆண்டுகள் இந்த தினம் அதிகாரபூர்வமற்ற நிலையில் அனுசரிக்கப்பட்டது வந்த நிலையில், 2008-ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் இந்த அறிக்கையை அதிகாரபூர்வமாக அங்கீகரித்தது. அன்று முதல் உலகம் முழுவதும், பெருங்கடல் திட்டம் அமைப்பின் சார்பாக கடல் தினமானது கொண்டாடப்பட்டு வருகிறது.