விடுதலைப் போராட்ட வீரர் ம. பொ. சிவஞானம் நினைவு தினம் இன்று…!

விடுதலைப் போராட்ட வீரரும், சிறந்த தமிழறிஞருமான ம.பொ.சிவஞானம் நினைவு தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
1906 ஆம் ஆண்டு ஜூன் 26 ஆம் தேதி சென்னையில் உள்ள ஆயிரம் விளக்கு எனும் பகுதியில் உள்ள சால்வன்குப்பம் எனும் இடத்தில் பிறந்தவர் தான் மா பொ சிவஞானம். இவர் சிறந்த தமிழறிஞரும், விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார். மா பொ சி என அறியப்படும் இவர், சிலப்பதிகாரத்தின் மீது கொண்டிருந்த ஆர்வம் மற்றும் ஆளுமை காரணமாக சிலம்புச் செல்வர் எனவும் அழைக்கப்பட்டுள்ளார்.
இவர் வள்ளலாரும் பாரதியும், எங்கள் கவி பாரதி, சிலப்பதிகாரமும் தமிழரும், கண்ணகி வழிபாடு ஆகிய பல நூல்களை எழுதியுள்ளார். மேலும் இவர் எழுதிய செங்கோல் எனும் வார இதழும் பெரும் புகழ்பெற்ற ஒரு இதழாக இருந்துள்ளது. மேலும் இவர் எழுதிய வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு எனும் நூலுக்காக இவருக்கு சாகித்ய அகாடமி விருதும் பெற்றுள்ளார்.
மெட்ராஸ் ஸ்டேட் எனும் பெயர் தமிழ்நாடு என்று மாறியதில் முக்கிய பங்காற்றிய இவர் பத்மஸ்ரீ விருதும் பெற்றுள்ளார். தன் வாழ்நாள் முழுவதும் உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு என்று முழங்கிய போஸ் அவர்கள் தனது 89வது வயதில் 1995 ஆம் ஆண்டு அக்டோபர் 3 ஆம் தேதி மறைந்தார். இவரது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
“ஆமாம்., நாங்கள் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்தோம்!” பாகிஸ்தான் அமைச்சர் பரபரப்பு பேட்டி!
April 25, 2025
பதிப்புரிமை வழக்கில் சிக்கிய ஏ.ஆர்.ரஹ்மான் – ரூ. 2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு.!
April 25, 2025
வீட்டுக்கு 200 ரூபாயில் ‘ஹை ஸ்பீடு’ இன்டர்நெட்! அமைச்சர் பி.டி.ஆர் அசத்தல் அறிவிப்பு!
April 25, 2025