இன்று விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா நினைவு நாள்..!

இன்று விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா நினைவு நாள். பிப்ரவரி 1, 2003 அன்று விண்வெளி பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பியபோது இறந்தார் கல்பனா சாவ்லா. இந்தியாவின் பஞ்சாபில் இவர் பிறந்தார். பின்னர் அமெரிக்கா சென்று அங்கு குடியுரிமை வாங்கினார். விண்வெளியில் பயணம் செய்த முதல் இந்தியப்பெண் என்ற பெருமை இவருக்கு உண்டு. பிப்ரவரி 1, 2003 இல் ஏழு வீரர்களுடன் விண்வெளி ஆய்வை வெற்றிகரமாக முடித்துவிட்டு STS-107 என்ற கொலம்பியா விண்ணோடத்தில் பூமிக்கு திரும்பி கொண்டிருந்த பொழுது புவி வெளி மண்டலத்தில் வெடித்துச் சிதறியதில் கல்பனா சாவ்லா உட்பட ஏழு பேரும் உயிரிழந்தனர். கல்பனா சாவ்லா விண்வெளி வீராங்கனையாக மலர்ந்து அந்த விண்ணிலேயே விண்மீன்களானார்.