வாட்ஸ்-அப்பை அப்டேட் செய்வதற்கு இன்றே கடைசி நாள் ஆகும்.அவ்வாறு செய்யவில்லை எனில்,வாட்ஸ்-அப்பில் உள்ள வசதிகள் படிப்படியாக குறைக்கப்படும் என்று வாட்ஸ்-அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வாட்ஸ்-அப் வெளியிட்ட புதிய தனிநபர் கொள்கைகள் பயனாளர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதாவது,வாட்ஸ்-அப்பின் புதுப்பிக்கப்பட்ட சேவை விதிமுறையின் அடிப்படையில் வாட்ஸ்-அப் பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் அனைத்தும் சேகரித்து அவற்றை ஃபேஸ்புக் உள்ளிட்ட பல வணிக நிறுவனங்களுக்கு விற்பது தொடர்பான கொள்கை விதிமுறைகள் அதில் இடம் பெற்றிருந்தன.மேலும்,இந்த புதிய கொள்கையை மே 15 ஆம் தேதிக்குள் ஏற்காவிட்டால் வாட்ஸ்-அப் கணக்கு முழுமையாக நீக்கப்படும் என தெரிவித்திருந்தது.
இந்நிலையில்,புதிய கொள்கையை நினைவுபடுத்தும் விதமாக,வாட்ஸ்-அப் தற்போது கணக்கு புதுப்பிப்பு பற்றிய தகவலை அறிவித்துள்ளது. அதன்படி,புதிய தனிநபர் கொள்கையை ஏற்று வாட்ஸ்-அப்பை அப்டேட் செய்வதற்கு இன்றே(மே 15) கடைசி நாள் ஆகும்.
அவ்வாறு,’புதிய கொள்கையை ஏற்காவிட்டால் வாட்ஸ்-அப் கணக்கு முழுமையாக நீக்கப்படாது என்றும்,ஆனால்,வாட்ஸ்-அப்பில் உள்ள பல வசதிகள் குறைக்கப்படும் என்றும் வாட்ஸ்-அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதாவது,புதிய கொள்கையை ஏற்காத பயனாளர்கள் வாட்ஸ்-அப்பில் மெசேஜ் அனுப்பும் வசதியை பயன்படுத்த முடியாது.அதற்குப்பதிலாக,வாட்ஸ்-அப்பில் இன்கம்மிங் கால் மற்றும் வீடியோ கால் வசதிகளை மட்டுமே பயன்படுத்த முடியும்.
அதன்பிறகும் புதிய கொள்கையை ஏற்காவிட்டால் மெசேஜ் அனுப்புதல் மற்றும் இன்கம்மிங் கால் வசதிகள் முழுமையாக நிறுத்தப்படும் என்று வாட்ஸ்-அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சென்னை :சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான எபிசோடில் அண்ணாமலையின் பேச்சால் எமோஷனல் ஆகும் மீனா.. ரோகிணியின் புதிய திட்டம்.. உதவி…
சென்னை : தெற்கு வங்காள விரிகுடாவின் மத்திய பகுதிகளிலும் அதை ஒட்டிய கிழக்கு பூமத்திய ரேகை இந்தியப் பெருங்கடலின் மத்திய…
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் அடுத்து எப்போது தொடங்கும் என சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு இன்று சென்னை தலைமை…
டெல்லி : நாடாளுமன்ற மக்களவை குளிர்கால கூட்டத் தொடரின் முதல் நாளே மாநில அவையும், மக்களைவையும் நாள் முழுவதும் ஒத்தி…
சென்னை : சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜூன் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'புஷ்பா-2' திரைப்படம் டிசம்பர் 5 ஆம் தேதி…
சென்னை : அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் ஊழல் குற்றசாட்டு முன்வைக்கப்பட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதற்காக அதானி நேரில்…