இயந்திர பொறியாளர் ஜேம்ஸ் வாட் மறைந்த தினம் வரலாற்றில் இன்று …!

Default Image

நீராவி இயந்திரத்தை மேம்படுத்தி தொழில் புரட்சியை ஏற்படுத்திய இயந்திர பொறியாளர் ஜேம்ஸ் வாட் அவர்கள் மறைந்த தினம் வரலாற்றில் இன்று.

1736 ஆம் ஆண்டு ஜனவரி 19-ஆம் தேதி ஸ்காட்லாந்தில் பிறந்த இயந்திர பொறியாளர் தான் ஜேம்ஸ் வாட். இவர் பல கண்டுபிடிப்புகளை உருவாக்கியவர். சிறு வயதிலிருந்தே இவருக்கு இருந்த அதிக ஆர்வம் காரணமாக 18 வயதிலேயே லண்டனில் கருவிகள் தயாரிக்கும் நிறுவனத்தில் பயிற்சி பெற்றுள்ளார். அதன் பின்பாக இயந்திரங்கள் தயாரிக்கும் வேலையை செய்து வந்துள்ளார். 1764 ஆம் ஆண்டு தாமஸ் நியூ காமன் என்பவரின் நீராவி இயந்திரத்தை பழுது பார்க்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

அதில் ஜேம்ஸ் வாட் கொண்டு வந்த மாற்றங்களால் இயந்திரத்தின் சக்தி பல மடங்கு பெருகியது. இதனை அடுத்து அதற்கான காப்புரிமையும் பெற்றுள்ளார். அதன் பின்பு இயந்திரத்தின் வேகத்தை கட்டுப்படுத்த உதவக்கூடிய சென்ட்ரிஃபியூகல் கவர்னர் கருவி, அழுத்தமானி, பொருள் அளவு, விசை, வேகம், தொலைவு ஆகியவற்றை பதிவு செய்யும் கருவி, நீராவியைக் கட்டுப்படுத்தும் த்ராட்டில்-வால்வு ஆகியவற்றை கண்டுபிடுத்துள்ளார்.

அதன் பின்பு இவர் பொறியாளர் மேத்யூ உடன் இணைந்து பல்வேறு நீராவி இயந்திரங்கள் தயாரித்ததால், தொழில் புரட்சி நாயகர் எனவும் பாராட்டை பெற்றுள்ளார். இந்த தொழில் புரட்சி காரணமாகவே மின்சாரத்தை கணக்கிடும் அளவு முறைக்கு வாட் என இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. இயற்கையான நீராவி சக்தியை கொண்டு பல மகத்தான கண்டுபிடிப்புகளை உருவாக்கிய ஜேம்ஸ் வாட் அவர்கள் 1819 ஆம் ஆண்டு ஆகஸ்டு 25-ஆம் தேதி தனது 83 ஆவது வயதில் மறைந்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்