இந்திய திரைப்பட இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள் மறைந்த தினம் வரலாற்றில் இன்று.
சுப்பிரமணியன் மற்றும் நாராயண குட்டி அம்மாள் தம்பதியினருக்கு 1928 ஆம் ஆண்டு ஜூன் 24-ஆம் தேதி பிறந்தவர் தான் எம்.எஸ்.விஸ்வநாதன். இவர் தமிழ் திரையுலகில் புகழ்பெற்ற இசையமைப்பாளராக விளங்கியுள்ளார். முதன் முதலாக ம.கோ.ராமச்சந்திரன் அவர்களின் ஜெனோவா எனும் திரைப்படத்தில் வெளியாகிய பாடல்களுக்கு இசையமைத்த இவர், தொடர்ந்து மலையாளம், கன்னடம் உள்ளிட்ட 1200 திரைப்படங்களுக்கு இசை அமைத்துள்ளார். மேலும் இவர் தெலுங்கு மற்றும் இந்தி மொழி பாடங்களுக்கும் இசையமைத்துள்ளார்.
தனது நான்காவது வயதிலேயே தந்தையை இழந்த விசுவநாதன் அவர்கள் இசை மீது கொண்ட நாட்டத்தால் 13 வயதில் கர்நாடக இசையை பயின்று வந்துள்ளார். அதன் பின்னதாக மேடை கச்சேரி நடத்தி வந்துள்ளார். மேலும் இவர் இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் கண்ணகி, காதல் மன்னன், காதலா காதலா போன்ற 10க்கும் மேற்பட்ட படங்களில் கூட நடித்துள்ளார். மேலும் இவர் தமிழில் 800 திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
மலையாளத்தில் 80 திரைப்படங்களுக்கும், தெலுங்கில் 30 திரைப்படங்களுக்கும், கன்னடத்தில் 15 திரைப்படங்களுக்கு இவர் இசையமைத்துள்ளார். மேலும் இவரது இசை திறமைக்காக 2003ஆம் ஆண்டு இசைப்பேரறிஞர் விருது வழங்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து கலைமாமணி விருது மற்றும் மதிப்புறு முனைவர் பட்டங்களும் இரண்டு பெற்றுள்ளார். இவ்வளவு திறமைகள் கொண்டு விளங்கிய எம் எஸ் விஸ்வநாதன் பலராலும் புகழப்பட்டவராக வாழ்ந்துள்ளார். பின் ஜூலை 14-ஆம் தேதி 2015 அன்று அதிகாலை 4:30 மணி அளவில் எம் எஸ் விஸ்வநாதன் அவர்கள் உயிரிழந்துள்ளார்.
சென்னை : தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தற்போது வலுபெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக…
கோவை : 1998ஆம் கோவை குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைதாகி நீண்ட வருடம் சிறையில் இருந்து வந்த அல்…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25ஆம் தேதி தொடங்கி இன்று (டிசம்பர் 20) நிறைவு பெற்றது. கடந்த…
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் – அஜ்மீர் நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு அருகே இன்று காலை லாரி மோதியதில்…
சென்னை: நடிகர் அஜித் குமார் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் விடமுயற்சி"படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகும்…
ஸ்பெயின் : தற்போதைய நவீன உலகத்தில், ஒருவர் தான் செய்யும் இந்த குற்ற செயல் யாருக்கும் தெரியாது என நினைத்து…