கர்நாடக இசைப் பாடகி தா.கி.பட்டம்மாள் இறந்த நாள் வரலாற்றில் இன்று..!

Default Image

பிரபலமான கர்நாடக இசைப் பாடகி தாமல் கிருஷ்ணசாமி பட்டம்மாள் இறந்தநாள் வரலாற்றில் இன்று.

தாமல் கிருஷ்ணசாமி பட்டம்மாள் எனும் கர்நாடக இசை பாடகி டி.கே.பட்டம்மாள் என பரவலாக அறியப்படுகிறார். 1919 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 19 ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தாமல் எனும் பகுதியில் பிறந்துள்ளார். தாமல் கிருஷ்ணசுவாமி தீட்சிதர் மற்றும் காந்திமதி தம்பதியினருக்கு மகளாக பிறந்த பட்டம்மாள், பட்டா என செல்லமாக அழைக்கப்பட்டுள்ளார்.

இவருக்கு மூன்று சகோதரர்கள் உள்ளனர், இவர்கள் மூவருமே மிகசிறந்த பாடகர்களாக இருந்துள்ளனர். இவர் 1939 ஆம் ஆண்டு ஈஸ்வரன் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. பாடல் பாடுவதில் அதிக ஆர்வம் கொண்ட பட்டம்மாள் முறையாக கர்நாடக இசை கற்றவர் கிடையாது. ஆனால், கச்சேரிகளில் கேட்ட இசை மூலமாக தான் இவர் தனது இசை திறமையை வளர்த்து கொண்டுள்ளார். அதன் பின்பதாக தனது திறமைகளை வளர்த்துக்கொண்ட இவர் மேடைக்கச்சேரிகள் மற்றும் திரைப்படங்களிலும் பாடி வந்துள்ளார்.

அதன் பின்பதாக தான் இவர் சிறந்த கர்நாடக இசை பாடகியாக தனது திறமைகளை வளர்த்துள்ளார். பின் பத்ம பூசண், இசைப்பேரறிஞர், பத்ம விபூசண், கலைமாமணி உள்ளிட்ட பல விருதுகளையும் பெற்றுள்ளார். இவரது பல பாடல்கள் தற்பொழுதும் வாழ்ந்து கொண்டிருக்கிறது. டி.கே.பட்டம்மாள் தனது 90-ஆவது வயதில் 2009 ஆம் ஆண்டு ஜூலை 15 ஆம் நாள் இயற்கை எய்தியுள்ளார். இவர் மறைந்தாலும் காலத்தால் அழியாத இவரது காந்த குரல் பாடல்கள் அழியா செல்வமாய் நிலைத்து நிற்கிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்