2011 ஆம் ஆண்டு மும்பையில் தொடர் குண்டு வெடிப்பு நிகழ்ந்த நாள் இன்று..!
2011 ஆம் ஆண்டு மும்பையில் தொடர் குண்டு வெடிப்பு நிகழ்ந்து 26 பேர் உயிரிழந்து இன்றுடன் ஏழு வருடமாகிறது.
மும்பையில் ஏற்கனவே ஜூலை 11-ஆம் தேதி 2006 ஆம் ஆண்டு 150 பேரை காவு வாங்கிய குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இது யாராலும் மறக்கமுடியாத ஒன்று. ஆனால் மும்பையில் ஜூலை 13-ஆம் தேதி 2011ஆம் ஆண்டு மூன்று இடங்களில் ஒரே நாளில் தொடர் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இந்த நிகழ்வு நடைபெற்று இன்றுடன் 7 வருடமாகிறது. இந்த தொடர் குண்டு வெடிப்பில் 26 பேர் உயிரிழந்த நிலையில், 150 பேருக்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்து உடல் உறுப்புகளையும் இழக்கக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டது.
இந்த குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு அந்நேரம் 2 லட்சமும் காயமடைந்தவர்கள் குடும்பத்திற்கு ஒரு லட்சமும் வழங்கப்பட்டது. 2006ஆம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற குண்டு வெடிப்பை விட 2011ஆம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற இந்த குண்டுவெடிப்பு தான் மிக மோசமானதாக கருதப்படுகிறது. இந்த நிகழ்வு நடந்து இன்றுடன் 7 வருடம் ஆகிறது.