இந்திய ஆன்மீகவாதி சுவாமி சின்மயானந்தாவின் நினைவு தினம் இன்று….!

Default Image

உலகெங்கிலும் ஆன்மிக வேதாந்த கருத்துக்களை பரப்பிய சுவாமி சின்மயானந்தா அவர்களின் நினைவுதினம் வரலாற்றில் இன்று அனுசரிக்கப்படுகிறது.

சுவாமி சின்மயானந்தா என்பவர் 1916 ஆம் ஆண்டு மே 8 ஆம் தேதி கேரளா மாநிலத்தில் உள்ள எர்ணாகுளம் எனும் பகுதியில் பூதம்பள்ளி என்னும் இடத்தில் பிறந்தவர். இவரது இயற்பெயர் பாலகிருஷ்ணன். இவர் லக்னோ பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்படிப்பை முடித்து, அதன் பின்பாக ஊடகவியல் துறையில் பணியாற்றி உள்ளார். இதன்பின் இந்திய அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூக பணிகளை செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வந்தார். இந்திய விடுதலை இயக்கத்தில் இவர் ஈடுபட்டு சிறையும் சென்றுள்ளார்.

அதன்பின் பத்திரிகை நிறுவனம் ஒன்றில் பணியாற்றிய இவர், இந்து சமய ஆன்மீக துறையில் அதிக அக்கறை கொண்டவராக இருந்துள்ளார். 1949 ஆம் ஆண்டு பிப்ரவரி 25-ஆம் தேதி சிவராத்திரி தினத்தன்று பாலகிருஷ்ணன் சந்நியாச தீட்சை பெற்று சுவாமி சின்மயானந்தா எனும் பெயரைப் பெற்றுள்ளார். இவர் இமயமலையில் உள்ள சுவாமி தபோவன மகாராஜ் என்பவரிடம் எட்டு ஆண்டுகள் இந்துத்துவ தத்துவத்தை பயின்றுள்ளார்.

இவர் அதன் பின் பல இடங்களில் ஆசிரமங்கள் அமைத்துள்ளார். சின்மயா மிஷன் எனும் அமைப்பைத் தொடங்கி அதன் மூலமாக உலகெங்கும் ஆன்மீக வேதாந்த கருத்துக்களை பரப்பி புகழ் பெற்றவர் தான் சுவாமி சின்மயானந்தா. இவர் ஆகஸ்ட் 3ஆம் தேதி 1993ஆம் ஆண்டு கலிஃபோர்னியாவில் உயிரிழந்தார். ஆனால் இவரது சீடர்கள் இவர் அந்த இடத்தில் மகா சமாதி அடைந்ததாக கூறுகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்