இன்று நடிகை சாவித்திரியின் இறந்த நாள்…!
டிசம்பர் 26 – (1981) இன்று தமிழ் திரைப்படவுலகில் புகழ்க் கோடி நாட்டிப் பறந்துகொண்டிருந்த நடிகை சாவித்திரி இறந்த நாள். பணமும் புகழும் வசதியுமாக வாழ்ந்த சாவித்திரி இப்படி எலும்புகள் துருத்திக் கொண்டிருக்க நோய்கூடாக மாறிப்போனது தான் சினிமாவின் நிஜம். சினிமாவை தவிர வேறு எந்த துறையிலும் வீழ்ச்சி இவ்வளவு பெரிய புறக்கணிப்பையும் மீளமுடியாத சோகம் சூழ்ந்த தனிமையும் தருவதில்லை.
சாவித்திரியின் இறுதிக் கட்ட புகைப்படம் வெளியே கவர்ச்சியாக தொன்றும் திரைப்பட உலகின் மற்றொரு அதிர்ச்சியூட்டும் கதை !. சினிமாவில் சொல்லப்பட்ட கதைகளை விட அதனுள் சொல்லப்படாத எண்ணிக்கையற்ற சோகக் கதைகள் , உண்மை நிகழ்வுகள் புதையுண்டு கிடக்கின்றன. பிரகாசமான வெளிச்சத்தில் மட்டுமே கண்டிருந்த சினிமா கலைஞர்களின் பின்னால் வெளியே பகிர்ந்து கொள்ளபடாத நூறு வேதனைகள், நிகழ்வுகள், தீராத சோகங்கள் மண்டிக் கிடக்கின்றன.