இன்று எழுத்தாளர் எல்.கைலாசம் அவர்களின் பிறந்த தினம்…!
சென்னை மயிலாப்பூரை சேர்ந்தவர் புதினா எழுத்தாளர் டாக்டர் எல்.கைலாசம். இவர் 1958-ம் ஆண்டு, ஜூலை 10-ம் தேதி திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்தார். இவரது மனைவி லட்சுமி, இவருக்கு, டாக்டர். கே. லட்சுமணன், கே. சுப்பிரமணியன் இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
இவர் பதினைந்துக்கும் மேற்பட்ட வரலாற்றுப் புதினங்களையும், தணிக்கை துறை சம்பந்தமான பல ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் இயற்றியுள்ளார். இந்திய விடுதலை போராட்ட வீரர்களின் வாழ்க்கையை தொகுத்து சுதந்திர சுடர்கள் என்ற புத்தகத்தையும் எழுதியுள்ளார். இதுபோன்று, திரு. கைலாசம் அவர்கள், நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.
இவர் எழுதிய பிரபலமான புத்தகங்கள், முத்துச்சிப்பி, மலர்சோலை மங்கை, மணிமகுடம், கயல், சுதந்திரசுடர்கள், ஸ்டிவ் ஜாப்ஸ், விலாஸிபி, REVENGE, சுதந்திராதேவி வேல் நாச்சியார், ராஜாளி, சிந்து இளவரசி, பொன்னி, இயக்கி ஆகியன ஆகும்.