தென்னிந்திய திரையுலகின் புகழ்பெற்ற பின்னணி பாடகி பி.சுசீலா பிறந்த தினம் இன்று …!

Default Image

தென்னிந்திய திரையுலகின் புகழ்பெற்ற பின்னணி பாடகி பி.சுசீலா பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

1935 ஆம் ஆண்டு நவம்பர் 13 ஆம் தேதி ஆந்திர மாநிலத்தில் உள்ள விஜய நகரில் பிறந்தவர் தான் பி.சுசிலா. பள்ளியில் படிக்கும் போதே இவருக்கு இசையில் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக ஆந்திராவின் புகழ்பெற்ற இசை மேதை ஆகிய துவாரம் வெங்கடசாமி நாயுடு அவர்களிடம் இசை பயின்றுள்ளார். பின் 1955 ஆம் ஆண்டு இவர் பாடிய எந்தன் உள்ளம் துள்ளி விளையாடுவதும் எனும் பாடல் பெரிதும் பிரபலமடைந்தது.

தற்போது வரை சுமார் அரை நூற்றாண்டுக்கு மேலாக திரைப்படத்துறையில் இசைப் பணியாற்றி வரக்கூடிய பி.சுசிலா அவர்கள் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களை பாடியுள்ளார். மேலும் ஐந்து முறை தேசிய விருதும், 10 முறைக்கு மேல் மாநில விருதுகளையும் வென்று பல சாதனைகளையும் படைத்துள்ளார்.

அது மட்டுமல்லாமல் இந்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம பூஷண் விருதும் இவருக்கு 2008 ஆம் ஆண்டு மத்திய அரசால் வழங்கி கவுரவிக்கப்பட்டது. அதோடு மட்டுமல்லாமல் தன் பெயரில் ஒரு அறக்கட்டளையை நிறுவி தேசிய அளவில் இசைத் துறையில் சாதனை புரிந்தவர்களை பாராட்டி விருது வழங்கி கௌரவித்து வருகிறார். இவரது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்