அமெரிக்காவின் பிரபல புனைகதை எழுத்தாளர் ரே பிராட்பரியின் பிறந்த தினம் இன்று …!

Default Image

அமெரிக்காவின் பிரபல புனைகதை எழுத்தாளர் ரே பிராட்பரியின் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. 

1920 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22 ஆம் தேதி அமெரிக்காவின் இலினாய்ஸ் மாநிலத்தில் உள்ள வாகிகன் நகரில் பிறந்தவர் தான் அமெரிக்காவின் பிரபல புனைகதை எழுத்தாளர் ரே பிராட்பரி. இவர் முழுநேர எழுத்தாளராக 1943 இல் இருந்து எழுதத் தொடங்கி உள்ளார். இவரது பல கதைகள் காமிக்ஸ் நிறுவனத்தால் படகதைகளாகவும் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் 1953-ல் வெளியான இவரது பாரன்ஹீட் 451 எனும் கதை உலகப் புகழ் பெற்றுள்ளது.

அதன் பின்பு இவரது கதை எழுதும் திறனை பாராட்டி அமெரிக்க தேசிய கலை பதக்கம், சிறப்பு புலிட்சர் பரிசு, எம்மி விருது உட்பட பல விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் செவ்வாய் கிரகத்தில் அமெரிக்காவின் கியூரியாசிட்டி ரோவர் வாகனம் தரை இறங்கிய இடத்திற்கு பிராட்பரி லேண்டிங் எனவும் இவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது. தினமும் பல மணி நேரம் கதை எழுதுவதை வழக்கமாகக் கொண்ட இவர் இதுவரை 600-க்கும் மேற்பட்ட சிறுகதைகள் மற்றும் ஏராளமான கட்டுரைகள், திரைக்கதைகள் மற்றும் நாடகங்களையும் எழுதியுள்ளார். எழுதுவதையே தனது வாழ்நாள் பணியாகச் செய்து வந்த இவர் 2012 ஆம் ஆண்டு தனது 93 வது வயதில் மறைந்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்