அகில உலக நாகஸ்வர ஏகசக்ராதிபதி டி.என்.ராஜரத்தினம் பிள்ளை அவர்கள் பிறந்ததினம் இன்று கொண்டாடப்படுகிறது.
1898 ஆம் ஆண்டு ஆகஸ்டு 27-ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருமருகல் எனும் ஊரில் பிறந்தவர் தான் டி.என்.ராஜரத்தினம் பிள்ளை. இவர் அகில உலக நாதஸ்வர சக்கரவர்த்தி எனும் பட்டம் பெற்ற நாதஸ்வர கலைஞர். இவரது முதல் நாதஸ்வர நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றுள்ளது. அங்கு இவரது இசையை பலர் ரசித்துக் கேட்க ஆரம்பித்தனர்.
இவரது முதல் கச்சேரியே அபாரமான வெற்றியடைந்த நிலையில், பல இடங்களில் தொடர்ந்து கச்சேரி நடத்த ஆரம்பித்துள்ளார். மேலும், இலங்கை, மலேசியா ஆகிய நாடுகளுக்கு சென்று இசை நிகழ்ச்சி நடத்தி உள்ளார். மிஸ் கமலா, கவி காளமேகம் ஆகிய திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
மேலும் இவர் சங்கீத அகாடமி விருது, அகில உலக நாதஸ்வர சக்கரவர்த்தி உள்ளிட்ட ஏராளமான பட்டம் மற்றும் விருதுகளை பெற்றுள்ளார். இவர் ஆறரை மணி நேர இசை தட்டு ஒன்றை வெளியிட்டுள்ளார். இது உலகம் முழுவதும் விற்பனையாகி சாதனை படைத்தது. உலகம் முழுதும் நாதஸ்வர கலைஞராக புகழ்பெற்ற டிஎன் ராஜரத்தினம் பிள்ளை அவர்களது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
பெங்களூரு : இன்று (ஏப்ரல் 2) நடைபெறும் ஐபிஎல் 2025 போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ்…
ஜெர்சி சிட்டி : ஆண்டுதோறும் ஏப்ரல் 1ஆம் தேதியன்று ஃபோர்ப்ஸ் பத்திரிகையானது உலக பணக்காரர்களின் பட்டியலை வெளியிடும். அதன்படி நேற்று…
பெங்களூரு : வரும் 5-ம் தேதி நடைபெறவுள்ள பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் இருந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின்…
டெல்லி : வக்பு வாரிய திருத்த சட்டமானது இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்ட திருத்தத்தை மத்திய சிறுபான்மை…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இன்று வக்பு வாரிய திருத்த சட்டத்தை மக்களவையில் மத்திய சிறுபான்மை மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் வக்பு வாரிய திருத்த சட்டத்தை மக்களவையில் மத்திய சிறுபான்மை மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை…