தமிழின் நகைசுவை எழுத்தாளரான சாவி பிறந்ததினம் இன்று.
சாவி தமிழில் மிகசிறந்த நகைசுவை எழுத்தாளர் ஆவார். இவரது முழுப்பெயர் சா.விஸ்வநாதன். இவர், இவர் வேலூர் மாவட்டம் ஆற்காடு அருகே உள்ள மாம்பாக்கம் என்னும் சிற்றூரில் சுப்பிரமணிய சாஸ்திரிக்கும், மங்களாவுக்கும் மகனாக பிறந்தார்.
இவர் தனது தந்தையின் பெயரின் முதல் எழுத்தான ‘சா’வுடன் தனது முதல் எழுத்தையும் சேர்த்து சாவி என்று புனைபெயர் வைத்துக் கொண்டு புகழ்பெற்றார். கிராமத்தில் நான்காவது வகுப்போடு படிப்பை நிறுத்திக் கொண்டார். எழுத்தாளராக வேண்டும் என்பது இவரது கனவு. எனவே ‘விடாக்கண்டர்’ என்ற பெயரில் எழுதி வந்தார். பின்னர் ‘கல்கி’ ஆசிரியர் சதாசிவம் இவரை அழைத்து, உதவி ஆசிரியராக நியமித்தார்.
தொடர்ந்து கல்கியில் இவர் எழுதிய ‘மாறுவேஷத்தில் மந்திரி’, ‘சூயஸ் கால்வாயின் கதை’ உள்ளிட்ட நகைச்சுவைக் கட்டுரைகள் பெரும் வரவேற்பைப் பெற்றன. படைப்புகளில் நகைச்சுவையுடன் கருத்துச் செறிவு, தன்னம்பிக்கை, விடாமுயற்சி, சாதித்துக்காட்ட வேண்டும் என்ற ஆர்வம் கொண்வர்.
ஞானபாரதி என்ற அமைப்பை நண்பர்கள் சிலருடன் சேர்ந்து தொடங்கினார். கலைத்துறையிலும் இதழ்த் துறையிலும் முத்திரை பதித்தவர்களுக்கு ஞானபாரதி விருதும் பொற்கிழியும் அளித்துக் கௌரவித்து வந்தார்.
இந்நிலையில், கலைஞர் கருணாநிதி தலைமையில் சாவி எழுதிய புத்தகங்களின் வெளியீட்டு விழா நாரதகான சபா அரங்கில் சிறப்பாக நடந்து கொண்டிருந்தவேளையில், தன்னுடைய பழைய நினைவுகளை மேடையில் பேசிக்கொண்டிருந்தபொழுதே மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கே சில மாதங்கள் நினைவின்றி இருந்த சாவி பிப்ரவரி 1-ம் தேதி, 2001-ம் ஆண்டு காலமானார்.
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…
வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…