இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
1965 ஆம் ஆண்டு செப்டம்பர் 19-ஆம் தேதி ஒஹையோ என்னும் பகுதியில் பிறந்தவர் தான் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ். 1987 ஆம் ஆண்டு அமெரிக்க கடற்படையில் இளநிலை அதிகாரியாக பணியாற்றிய இவர், இரண்டு ஆண்டுகளில் கடற்படை விமானி ஆகியுள்ளார்.
அதன் பின்பு, 2006-ஆம் ஆண்டு டிசம்பர் 9 ஆம் தேதி டிஸ்கவரி விண்வெளி கலத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்பப்பட்ட இவர், அங்கு பகவத்கீதை, விநாயகர் சிலை மற்றும் கொஞ்சம் சமோசாக்களை விண்வெளிக்கு எடுத்துச் சென்றுள்ளார். இது தற்பொழுது வரை பேசப்படக்கூடிய ஒன்றாக இருக்கிறது.
விண்வெளியில் அதிக முறை நடந்த பெண் எனும் சாதனையையும் இவர் படைத்துள்ளார். ஆனால் இந்த சாதனையை அதன் பின் காத்ரின் எனும் பெண் முறியடித்துள்ளார். இவர் நாசா விண்வெளி வீரர் அலுவலகத்தின் துணை தலைவராகவும் பணியாற்றி வருகிறார். இவருக்கு நேவி கமென்டேஷன் விருது, நேவி மற்றும் மரைன் கார்ப்ஸ் சாதனை விருது, மனிதாபிமான சேவை விருது மற்றும் பல்வேறு பிற சேவை விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து இவர் விண்வெளி நிலையத்தில் பல்வேறு சாதனைகளை மேற்கொண்டு வளர வாழ்த்துக்கள். இன்று இவரது 56 ஆவது பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது.
டெல்லி : ரோஹித் சர்மா சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இருந்து இப்போது ஓய்வு பெறவில்லை என திட்டவட்டமாக தெரிவித்த நிலையில்.…
சென்னை : தமிழ்நாடு அரசின் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நாளை (மார்ச் 14, 2025) காலை…
இஸ்லாமாபாத் : நேற்று போலன் மாவட்டத்தில் பலுசிஸ்தான் கிளர்ச்சி அமைப்பான பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் (BLA) சுமார் 500 பயணிகளுடன்…
டெல்லி : தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக சென்னையில் வரும் 22 ஆம் தேதி திமுக சார்பில் ஆலோசனைக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு…
பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு தொடங்கியதிலிருந்து அரசியல் வட்டாரத்தில் ஹாட் டாப்பிக்கான விஷயமாக மாறியிருக்கிறது. ஏனென்றால், இந்த கூட்டத்தொடரில்…
சென்னை : மும்மொழிக் கொள்கை தொடர்பான விவாதத்தில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் தமிழ்நாடு தகவல் தொழில்நுட்ப அமைச்சர்…