சமஸ்கிருத அறிஞரும், தத்துவ ஞானியுமான பண்டிட் கோபிநாத் கவிராஜின் பிறந்த தினம் இன்று…!
சமஸ்கிருத அறிஞரும், தத்துவ ஞானியுமான பண்டிட் கோபிநாத் கவிராஜின் பிறந்த தினம் வரலாற்றில் இன்று கொண்டாடப்படுகிறது.
1887 ஆம் ஆண்டு செப்டம்பர் 7-ஆம் தேதி வங்கதேச தலைநகர் தாக்கா அருகே உள்ள தாம்ரே கிராமத்தில் பிறந்தவர் தான் பண்டிட் கோபிநாத் கவிராஜ், இவர் சிறந்த சமஸ்கிருத அறிஞரும், தத்துவஞானியுமாக விளக்கியுள்ளார். இவர், விஷீத்த வாணி, அகண்ட மஹாயோக், பாரதிய சன்ஸ்க்ருதி கீசாதனா, தாந்த்ரிக் சாஹித்ய ஆகிய பல நூல்களை எழுதியுள்ளார்.
1934 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு இவருக்கு மகாமகோபாத்தியாய விருது வழங்கி சிறப்பித்தது. மேலும் இவர் பத்ம விபூஷண், சாகித்ய வாசஸ்பதி, தேஷிகோத்தம், சாகித்ய அகாடமி ஆகிய விருதுகளையும் பெற்றுள்ளார். தத்துவங்கள் மற்றும் அதன் தொடர்பான 1500-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் கொண்ட நூலகத்தை தனிப்பட்ட முறையில் அமைத்து வைத்திருந்த இவர், புத்தக அறிவு போதாது அது சுய அறிவோடு சேர்ந்திருக்க வேண்டும் எனவும் அடிக்கடி கூறுவாராம். தலைசிறந்த தத்துவஞானியாக விளங்கிய இவர் தனது 89-வது வயதில் 1976 ஆம் ஆண்டு மறைந்தார்.