ஆங்கில அகராதியை முதன்முதலில் உருவாக்கிய சாமுவேல் ஜான்சன் பிறந்த தினம் இன்று…!

Default Image

ஆங்கில அகராதியை முதன்முதலில் உருவாக்கிய சாமுவேல் ஜான்சன் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. 

1709 ஆம் ஆண்டு செப்டம்பர் 18-ஆம் தேதி இங்கிலாந்தில் உள்ள லிக்ஃபீல்டு என்ற இடத்தில் பிறந்தவர் தான் ஆங்கில அகராதியை உருவாக்கிய சாமுவேல் ஜான்சன். இவர் கவிஞர், எழுத்தாளர், கட்டுரையாளர், இலக்கியத் திறனாய்வாளர், வாழ்க்கை வரலாற்றாளர் மற்றும் ஆசிரியராகவும் விளங்கியுள்ளார்.

ஜோன்சன் ஆக்சுபோர்டு பெம்புரோக் கல்லூரியில் பயின்ற இவர், பண உதவி கிடைக்காததால் தனது படிப்பை இடைநிறுத்தி அதன் பின்பு பாடசாலை ஆசிரியராக இலண்டனில் பணியாற்றியுள்ளார். அங்கு இவர் ஜென்டில்மேன் மேகஸின் என்னும் இதழை வெளியிட்டு உள்ளார்.

அதன் பின்பு 1755 ஆம் ஆண்டு ஆங்கில அகராதியை வெளியிட்டுள்ளார். இந்த அகராதி பெரும் வரவேற்பை பெற்றது. இதுவே பிரித்தானியாவின் முதன்மை அகராதியாகவும் அக்காலத்தில் விளங்கியுள்ளது. இவர் 1784 ஆம் ஆண்டு தனது 75 ஆவது வயதில் உயிரிழந்தார். இவரது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்