இன்று முன்னாள் பிரதம மந்திரியான இந்திரா காந்தியின் ஆலோசகராக இருந்த ரஞ்சன் ராய் டேனியலின் பிறந்தநாள்…!

Default Image

இன்று முன்னாள் பிரதம மந்திரியான இந்திரா காந்தியின் ஆலோசகராக இருந்த ரஞ்சன் ராய் டேனியலின் பிறந்தநாள்.

ரஞ்சன் ராய் டேனியல், ஆகஸ்ட் 11-ம் தேதி, 1923-ம் ஆண்டு, கன்னியாகுமாி மாவட்டத்தில் நாகர்கோவிலில், டேனியல் நாடார் மற்றும் தெரசா செல்லம்மாள் அவர்களுக்கு மூன்றாவது மகனாக பிறந்தார். இவர் தனது பள்ளி மற்றும் கல்லூரி பருவத்தை நிறைவு செய்ததை தொடர்ந்து பல்வேறு பணிகளிபோல் ஈடுபட்டார்.

இந்நிலையில், டேனியல் பிரபஞ்ச இயற்பியல் மற்றும் விண்வெளி இயற்பியல் துறையில் பணிபுரிந்தார். மேலும், டாடா இன்ஸ்டிட்யூட் ஆஃப்  பண்டமண்டல் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனராக இருந்தார். இவர் 1976-ஆம் ஆண்டு இந்தியாவின் பிரதம மந்திரியாக இருந்த இந்திரா காந்தி அவர்களின் ஆலோசகராகவும் பணியாற்றினார்.

பின் இவர் 23 ஆண்டுகளாக ஹோமி ஜஹாங்கீர் பாபா உடன் இணைந்து பிரபஞ்சத்தில் கதிரியக்க கதிர்கள் வேலை செய்தார். அறிவியல் மற்றும் பொறியியல் காண பங்களிப்பிற்காக இவருக்கு 1922 ஆம் ஆண்டில் இந்திய அரசு பத்ம பூஷன் விருது வழங்கி கவுரவித்தது.

இந்நிலையில், இவர், நீண்ட நாள் நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில், மார்ச் 27ஆம் தேதி 2005 இல் தனது 81 வயதில் இம்மண்ணுலகை விட்டு மறைந்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்