நோபல் பரிசு பெற்ற ஜெர்மானிய வேதியியலாளர் பிரெட்ரிக் வில்ஹெம் ஆஸ்வால்டு பிறந்த தினம் இன்று…!
நோபல் பரிசு பெற்ற ஜெர்மானிய வேதியியலாளர் பிரெட்ரிக் வில்ஹெம் ஆஸ்வால்டு அவர்களின் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
1853 ஆம் ஆண்டு செப்டம்பர் 2 ஆம் தேதி லத்வியா நாட்டின் ரிகா நகரில் பிறந்தவர் தான் பிரெட்ரிக் வில்ஹெம் ஆஸ்வால்டு. இவர் ஒரு நோபல் பரிசு பெற்ற ஜெர்மானிய வேதியியலாளர் ஆவார். மின்வேதியியல், ரசாயன இயக்கவியல் குறித்து ஆய்வு மேற்கொண்ட இவர், நீர்த்தல் விதியை கண்டறிவதற்கான ஆராய்ச்சியில் பெரும் பங்காற்றியுள்ளார். எனவே தான் ஆஸ்வால்டு நீர்த்தல் விதி என அழைக்கப்படுகிறது.
இந்நிலையில் ரசாயன சமநிலை, வினைவேக மாற்றம், எதிர்வினை இயக்க வேகம் குறித்த கண்டுபிடிப்புக்காக இவருக்கு 1909ஆம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது. மேலும் இவர்,டெக்ஸ்ட் புக் ஆஃப் ஜெனரல் கெமிஸ்ட்ரி, அவுட்லைன் ஆஃப் ஜெனரல் கெமிஸ்ட்ரி என்பது உட்பட பல பாடப் புத்தகங்களையும், பகுப்பாய்வு வேதியியல், மின் ரசாயனவியல், கனிம வேதியியல் உள்ளிட்ட பிரிவுகளில் பல நூல்களையும் எழுதி உள்ளார். இயற்பியல் வேதியல் துறையில் முன்னோடியாக திகழ்ந்த இவர் தனது 79வது வயதில் 1932 ஆம் ஆண்டு மறைந்தார்.