நோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதை அமர்த்திய சென் பிறந்த தினம் இன்று ….!

Default Image

நோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதை அமர்த்திய சென் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

1933 ஆம் ஆண்டு நவம்பர் 3 ஆம் தேதி மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சாந்திநிகேதனில் பிறந்தவர் தான் அமர்த்திய சென். பொருளாதாரக் கோட்பாடு, அரசியல் தத்துவம், பொது சுகாதாரம் உள்ளிட்ட பல துறைகளில் ஆய்வுகளை மேற்கொண்ட இவர் பொருளாதார நிபுணராக திகழ்ந்துள்ளார். உணவு உற்பத்தி மட்டும் போதாது அதை வாங்க கூடிய மக்களுக்கும் சக்தி வேண்டும்.

பஞ்சம் மற்றும் வறட்சி ஏற்பட்டால் மக்களிடம் பணப்புழக்கத்தை அதிகரிக்க செய்ய வேண்டும். உணவுப் பொருட்களை குறைந்த விலையில் கிடைக்கச் செய்ய வேண்டும் என கூறியவர் அமர்த்திய சென். பொருளாதாரத் துறையில் இவர் அளிக்கும் பங்களிப்பை பாராட்டி 1998 ஆம் ஆண்டு இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

மேலும் இவரது மனித நேயம், சமூக அக்கறை ஆகியவற்றை பாராட்டியும் பல நாடுகள் இவருக்கு விருதுகளை வழங்கி உள்ளது. மேலும் இவருக்கு 1999  ஆம் ஆண்டு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. இவரது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்