நிலவில் முதன் முறையாக கால் தடம் பதித்த நீல் ஆம்ஸ்ட்ராங்கின் பிறந்தநாள் வரலாற்றில் இன்று.
நிலவில் முதன் முதலில் கால் தடம் பதித்த விண்வெளி வீரர் எனும் பெருமைக்குரியவர் தான் நீல் ஆம்ஸ்ட்ராங். இவர் 1930 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி அமெரிக்காவில் உள்ள ஓஹியோ மாநிலத்தில் வாபகெனெட்டா எனும் நகரில் பிறந்தார். இவருக்கு ஆறு வயது இருக்கும் போதே இவர் தனது தந்தையுடன் விமானத்தில் பயணித்துள்ளார். அப்பொழுதே இவருக்கு விமானம் ஓட்டும் ஆசை வந்துள்ளது. எனவே தனது 16-வது வயதிலேயே விமானம் ஓட்டும் உரிமத்தையும் பெற்றுள்ளார்.
அதன் பின்பு 1962 ஆம் ஆண்டு நாசா விண்வெளி திட்டத்தில் இணைந்து அங்கும் டெஸ்ட் பைலட், பொறியாளர் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டு பணியாற்றியுள்ளார். 1969 ஆம் ஆண்டு மைக்கேல் காலின்ஸ் மற்றும் எட்வார்ட் ஆல்ட்ரின் ஆகியோருடன் இணைந்து நிலவில் இறங்கும் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளார். அப்பல்லோ 11 விண்கலத்தில் குழு தலைவராக விண்வெளி சென்ற இவர், 1969 ஜூலை 20 ஆம் தேதி நிலவில் முதன்முதலாக காலடி எடுத்து வைத்துள்ளார்.
உலகம் முழுவதும் இவருக்கு 17 விருதுகள் வழங்கப்பட்டுள்ளதுடன் ஏராளமான பல்கலைக்கழகங்களில் இவருக்கு டாக்டர் பட்டமும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இவருக்கு கௌரவ பதக்கங்கள், சிறந்த பணிக்கான நாசா விருது ஆகியவையும் வழங்கப்பட்டுள்ளது. 2012 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7 அன்று இவருக்கு இருதயத்தில் கரோனரி தமனிகளில் உள்ள அடைப்பை சரி செய்வதற்காக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த சிகிச்சைக்குப் பின் இவரது உடலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வந்தது. இருந்தாலும் மருத்துவமனையில் இருக்கும்போதே அவரது உடல் நலத்தில் திடீரென சிக்கல் உருவாகியது. இதனையடுத்து ஆகஸ்ட் 25, 2012 ஆம் ஆண்டு சின்சினாட்டி, ஓஹியோவில் இவர் மரணமடைந்துள்ளார். விண்வெளி ஆராய்ச்சிகளில் அதிக ஆர்வம் கொண்டு சிறந்த விண்வெளி வீரராக திகழ்ந்து வந்த நீல் ஆம்ஸ்ட்ராங் தனது 82-வது வயதில் உயிரிழந்துள்ளார்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…