தேசியக் கவி ராம்தாரி சிங் தின்கர் பிறந்த தினம் இன்று…!
தேசியக் கவி ராம்தாரி சிங் தின்கர் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
1908 ஆம் ஆண்டு செப்டம்பர் 23-ஆம் தேதி பீகார் மாநிலத்திலுள்ள பேகுசராய் மாவட்டத்தில் உள்ள சிம்ரியா எனும் சிறிய கிராமத்தில் பிறந்தவர் தான் ராம்தாரி சிங் தின்கர். இவர் இந்தி கவிதை இலக்கியத்தின் முக்கிய தூண் என போற்றப்படுகிறார். இந்திய விடுதலைப் போராட்டத்தின் பொழுது இவர் எழுதிய தேசியவாத கவிதைளால் கிளர்ச்சி கவிஞராக திகழ்ந்துள்ளார்.
சர்தார் வல்லபாய் பட்டேல் 1928 ஆம் ஆண்டு நடந்த விவசாயிகள் சத்தியாகிரகப் போராட்டத்தின் வெற்றி குறித்து 10 கவிதைகள் எழுதி உள்ளார். இவை பெரிதும் புகழ்பெற்றது. மேலும் இவர் எழுதிய சம்ஸ்க்ருதி கே சார் அத்யாய் என்ற நூலுக்கு சாகித்ய அகாடமி விருதும், ஊர்வசி காவியத்துக்காக பாரதிய ஞானபீட விருதும் கிடைத்துள்ளது. மேலும் இவர் பத்மபூஷன் விருதும் பெற்றுள்ளார்.
கவிதை மட்டுமல்லாமல் உரைநடை, மொழி வளர்ச்சி ஆகிய துறைகளிலும் இவர் சேவையாற்றியதற்காக 4 ஞானபீட விருதுகள் வழங்கப்பட வேண்டும் என பிரபல கவிஞர் ஹரிவன்ஷ் ராய் பச்சன் அவர்கள் புகழ்ந்துள்ளார். புரட்சிக்கவிஞர், தேசிய கவிஞர் எனப் போற்றப்பட்ட பிரபல கவிஞர் ராம்தாரி சிங் தின்கர் 1974 ஆம் ஆண்டு தனது 66-வது வயதில் மறைந்தார். இவரது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.