பன்மொழி அறிஞர் சையது முஜ்தபா அலியின் பிறந்த தினம் இன்று…!
வங்காள எழுத்தாளரும், பன்மொழி அறிஞருமாகிய சையது முஜ்தபா அலியின் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
1904 ஆம் ஆண்டு செப்டம்பர் 13-ஆம் தேதி வங்காள மாகாணத்தின் கரீம்கஞ்ச் நகரில் பிறந்தவர் தான் சையது முஜ்தபா அலி. இந்த கரீம்கஞ்ச் நகர் தான் தற்போது அசாம் என அழைக்கப்படுகிறது. இவர் சிறந்த எழுத்தாளரும், பன்மொழி அறிஞருமாக திகழ்ந்துள்ளார். வங்காள மொழியை தாய்மொழியாகக் கொண்ட இவர் இந்தி, அரபி, பாரசீகம், உருது, பிரஞ்சு, மராத்தி, குஜராத்தி, ஆங்கிலம், சமஸ்கிருதம் உள்ளிட்ட 15 மொழிகளில் நிபுணராக திகழ்ந்துள்ளார்.
மேலும் தனது சொந்த வாழ்க்கை அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு பல கதைகளை எழுதிய இவர் தனது தனித்துவமான கதைகளால் மிகவும் பிரபலம் அடைந்தார். மேலும் இவரது படைப்புகளுக்கு நரசிங்கதாஸ் விருது, ஆனந்த புரஸ்கார் ஆகிய விருதுகளும் வழங்கப்பட்டுள்ளன. தேசம், இனம், மொழி, மதம் என அனைத்துக்கும் அப்பாற்பட்டு பொதுநல உணர்வோடு பணியாற்றிய வங்காள எழுத்தாளர் சையது முஜ்தபா அலி 1974 ஆம் ஆண்டு தனது 70-வது வயதில் மறைந்தார். இவரது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.