இந்திய பசுமை புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமிநாதன் பிறந்த தினம் இன்று…!

Published by
Rebekal

இந்திய பசுமை புரட்சியின் தந்தை என்றழைக்கப்படும் மான்கொம்பு சாம்பசிவன் சுவாமிநாதன் பிறந்த தினம் வரலாற்றில் இன்று.

1925 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7-ஆம் தேதி கும்பகோணத்தில் பிறந்தவர் தான் எம்.எஸ்.சுவாமிநாதன். இவரது முழுப்பெயர் மான்கொம்பு சாம்பசிவன் சுவாமிநாதன். இவர் மருத்துவராக வேண்டும் என அவரது பெற்றோர்கள் ஆசைப்பட்டாலும், 1942 ஆம் ஆண்டு வங்கத்தில் ஏற்பட்ட பஞ்சம் காரணமாக வேளாண் துறையில் ஆராய்ச்சி செய்ய முடிவெடுத்துள்ளார். ஐபிஎஸ் அதிகாரியாக 1948 ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டிருந்தாலும், அவர் அந்த பணியில் சேராமல் சிறந்த ஆராய்ச்சியாளராக இருந்து வந்துள்ளார்.

நூற்றுக்கணக்கான ஆராய்ச்சி கட்டுரைகள் மற்றும் புத்தகங்கள் எழுதியுள்ள இவர், 1960 -களில் இந்தியாவில் உணவு பஞ்சம் ஏற்பட்டு, இந்தியர்கள் உணவு உற்பத்தி செய்ய முடியாமல் பசியால் கொத்து கொத்தாக உயிர் இழப்பார்கள் என்று பல நாடுகள் கூறி உள்ளது. இதை பொறுத்துக்கொள்ள முடியாத எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்கள் ஜப்பானில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய ரக கோதுமையை இந்தியாவில் அறிமுகம் செய்து 20 சதவீத லாபத்தை வரவழைத்து காண்பித்துள்ளார்.

இதனையடுத்து கோதுமைப் புரட்சி என்று பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் இதை பாராட்டியுள்ளார். அதன் பின்பு இவருக்கு ராமன் மகசேசே விருது(1971), உலக உணவு பரிசு(1987), யுனெஸ்கோ மகாத்மா காந்தி விருது (2000), இந்திரா காந்தி தேசிய ஒருமைபாட்டுக்கான விருது(2013), பத்மஸ்ரீ(1967), பத்ம பூஷண்(1972), பத்ம விபூஷண்(1989) உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. தற்பொழுதும் பசுமைப் புரட்சியின் தந்தை என அழைக்கப்படும் எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்கள் தனது வாழ்நாளின் 92 வது வயதில் அடியெடுத்து வைக்கிறார்.

Published by
Rebekal

Recent Posts

அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி பலமாக இருப்பதாக திருமாவளவன் சொல்லிவிட்டார்.. – தமிழிசை பேச்சு!

அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி பலமாக இருப்பதாக திருமாவளவன் சொல்லிவிட்டார்.. – தமிழிசை பேச்சு!

சென்னை : விசிக தலைவர் திருமாவளவன் நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டு சில விஷயங்களை பேசியிருந்தார். அதில் " ஒரு…

32 minutes ago

live : அரசியல் நிகழ்வுகள் முதல்…பெல்ஜியம் ரேஸிலும் அசத்திய அஜித் குமார் அணி வரை!

சென்னை : தமிழகத்தில் பல்கலைக்கழகங்களின் வேந்தராக (Chancellor) இருக்கும் ஆளுநருக்கு, பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்கள் மற்றும் துணைவேந்தர்கள் மாநாடு போன்றவற்றை நடத்துவதற்கு…

1 hour ago

திரும்பி பார்முக்கு வந்த ஹிட் மேன்! ரோஹித் ஷர்மாவை புகழ்ந்து தள்ளிய வீரர்கள்!

மும்பை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில்,…

2 hours ago

இந்தியாவுக்கு விசிட் அடிக்கும் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ்! என்ன காரணம்?

டெல்லி : அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தனது மனைவி உஷா வான்ஸ், மூன்று குழந்தைகளுடன் இந்தியாவுக்கு நான்கு நாள்…

3 hours ago

GT4 ஐரோப்பிய கார் ரேஸில் மாஸ் காட்டிய அஜித் அணி! 2-வது இடத்தை பிடித்து சாதனை!

பெல்ஜியம் : அஜித்குமார் நடிப்பையும் தாண்டி பைக் மற்றும் கார் ரேசிங்கில் அதிகம் ஆர்வம் கொண்ட ஒருவர். ஒரு பக்கம் படங்களில்…

3 hours ago

“என் போனை ஒட்டு கேக்குறாங்க” நயினார் மாதிரி தான் எனக்கும் – சீமான் ஆதங்கம்!

சென்னை : தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது தனது தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படுவதாகவும், இதற்கு…

4 hours ago