புதிய கல்வி முறையை அறிமுகப்படுத்திய மரியா மாண்ட்டிசோரி பிறந்த தினம் இன்று…!
புதிய கல்வி முறையை அறிமுகப்படுத்திய இத்தாலியை சேர்ந்த மரியா மாண்ட்டிசோரி பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
1870 ஆம் ஆண்டு ஆகஸ்டு 31-ஆம் தேதி இத்தாலியில் பிறந்த மருத்துவரும் கல்வியாளருமாகியவர் தான் மரியா மாண்டிசோரி. இவர் புதிய கல்வி முறையை அறிமுகப்படுத்தியவர். நோட்டு புத்தகங்களுக்கு பதிலாக பொம்மை, வண்ண அட்டை, ஒலி எழுப்பும் கருவிகள், ஓவியம், வண்ணத்தாள் ஆகியவற்றின் மூலமாக கல்வி முறையை மாற்றியவர். குழந்தைகளுக்கு பாடங்களை எளிதாக கற்றுக் கொடுக்க வேண்டும் எனும் இவரது கொள்கை உலகம் முழுவதும் பரவியது.
குறிப்பாக அமெரிக்கா, சுவிட்சர்லாந்து, ஸ்பெயின், நெதர்லாந்து, பிரிட்டன் ஆகிய நாடுகளும் இவருக்கு அழைப்பு விடுத்தது. அங்கும் இவர் சென்று தனது புதிய கல்வி முறை குறித்து விளக்க உரை நிகழ்த்தினார். மேலும் சுமார் 200 ஆண்டுகள் குறித்த கல்வி முறையை ஆராய்ந்து இவர் பல நூல்களையும் எழுதியுள்ளார். மேலும் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளின் கற்கும் திறனையும் இவர் மேம்படுத்தி உள்ளார்.
எட்டு ஆண்டுகள் இந்தியாவில் தங்கி இருந்து ஏராளமான மாணவர்களுக்கு இந்த புதிய கல்வி முறையின் படி பயிற்சி அளித்த இவர், பல மாநாடுகளில் பங்கேற்று உள்ளார். மேலும் இவர் இந்தியா தான் தனது இரண்டாவது வீடு எனவும் கூறுவாராம். புதிய கல்வி முறையை அறிமுகப்படுத்தி மாணவர்களிடையே உற்சாகத்தையும், கல்வி கற்கும் திறனையும் அதிகப்படுத்திய இவர் தனது 82-வது வயதில் 1952-ஆம் ஆண்டு மறைந்தார்.