பழம்பெரும் திரைப்பட பாடல் ஆசிரியர் உடுமலை நாராயணகவி பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
1899 ஆம் ஆண்டு செப்டம்பர் 25-ஆம் தேதி கோயம்புத்தூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அடுத்த பூவிளைவாடி எனும் கிராமத்தில் பிறந்தவர் தான் பழம்பெரும் திரைப்படப் பாடலாசிரியர் உடுமலை நாராயணகவி. இவர் பல்வேறு கிராமிய கலைகளை ஆர்வத்துடன் கற்று பயின்றவர். குறிப்பாக புரவியாட்டம், சிக்கு மேலாட்டம், தப்பாட்டம், உடுக்கடிப்பாட்டு ஒயில் கும்மி ஆகியவை இவர் மிகவும் விரும்பி பெற்ற கலைகளாக கூறப்படுகிறது.
இவர் விடுதலைப் போராட்டம் தீவிரமாக இருந்த காலகட்டத்தில் தேசிய உணர்வு மிக்க பாடல்கள் பலவற்றை எழுதி மக்களிடையே எழுச்சியை ஏற்படுத்தியவர். இவர் தனது பாடல்களில் பல்வேறு சமுதாய சீர்திருத்தம் நிறைந்த கருத்துக்களை புகுத்தியவர். முன்னணி பாடலாசிரியராக கவிராயர் என அன்போடு அழைக்கப்பட்டுள்ளார்.
இவரது திறமையயை பாராட்டி 1967ம் ஆண்டு சங்கீத நாடக சங்கம் சிறந்த பாடலாசிரியராக இவரை தேர்வு செய்தது. மேலும் திரையுலகில் தனக்கென்று தனி இடம் பெற்ற இவர், பல்லாயிரக்கணக்கான பாடல்களை எழுதியுள்ளார்.
பாடகர் மட்டுமல்லாமல் கவிஞர், நடிகர், நாடக ஆசிரியர், சீர்திருத்தவாதி என பன்முகத்தன்மை கொண்ட உடுமலை நாராயணகவி 1981 ஆம் ஆண்டு தனது 82-வது வயதில் மறைந்தார். இவரது நினைவாக 200ஆம் ஆண்டு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. மேலும் அவரது ஊரில் இவருக்கு மணிமண்டபமும் அமைக்கப்பட்டுள்ளது. இவரது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…
சென்னை : திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, திமுகவுக்கு ஆதரவாக அவ்வப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரைப்…
சென்னை : அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம்…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதியன்று ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் திமுக…
சென்னை : மயிலாடுதுறையில் தரங்கம்பாடி , பொன்னேரி, செங்குன்றம் ஆகிய பகுதிகளிலும், சென்னையில் மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்று முதல்…