விஞ்ஞான உலகையே வியக்க வைத்த ஜேம்ஸ் திவார் பிறந்த தினம் இன்று…!
விஞ்ஞான உலகையே வியக்க வைத்த ஜேம்ஸ் திவார் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
1842 ஆம் ஆண்டு செப்டம்பர் 20-ஆம் தேதி ஸ்காட்லாந்தில் உள்ள கின்கார்டைன் எனும் கிராமத்தில் பிறந்தவர் தான் ஜேம்ஸ் திவார். இவர் விஞ்ஞான உலகையே வியப்படைய செய்தவர். காரணம் 1897 ஆம் ஆண்டு இவர் கண்டறிந்த இரட்டைச் சுவர் கண்ணாடி குடுவை தான். அதாவது குளிர்ந்த நிலையிலும், வெப்பநிலையிலும் பொருட்களை பாதுகாக்க கூடிய வகையில் உருவாக்கப்பட்ட பிளாஸ்க்கை கண்டறிந்தவர் இவர் தான்.
வெற்றிடத்தின் வழியாக வெப்பம் கதிராக வெளியேறி விட முடியும் என்பதால், குடுவையின் உட்புறம் வெள்ளி முலாம் பூசி, அதில் சிறிதளவு வெப்பமும் வெளியேற வாய்ப்பு இன்றி தடுத்து அட்டகாசமான குடுவையை வெற்றிகரமாக கண்டறிந்ததால் பலரது பாராட்டை பெற்றார். பின் கார்டைட் எனும் வெடி பொருளையும் கண்டுபிடித்தார். உலகின் எல்லா நாடுகளிலும் உள்ள பிரபலமான விஞ்ஞானிகள் பலரும் பார்த்து வியந்த விஞ்ஞானி ஜேம்ஸ் திவார், தனது 80 ஆவது வயதில் 1923ஆம் ஆண்டு மறைந்தார். இவரது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.