இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேல் பிறந்த தினம் இன்று …!

இந்தியாவின் இரும்பு மனிதர் என்றழைக்கப்படும் சர்தார் வல்லபாய் படேல் பிறந்த தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
1875 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதி குஜராத்தில் பிறந்தவர் தான் சர்தார் வல்லபாய் படேல். இந்தியாவின் இரும்பு மனிதர் என்று போற்றப்படும் இவர் நாட்டின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டுக்கும், பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக இருந்த விஷயங்களை எதிர்த்துப் போராடியவர்.
மேலும் வக்கீல் பணியாற்றிய இவர், உள்ளூர் மக்களின் பிரச்சனைகளை தீர்த்து மிகவும் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். 1917 ஆம் ஆண்டு அகமதாபாத் மாநகராட்சி தேர்தலில் வெற்றிபெற்று சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சராகவும், துணைப் பிரதமராகவும் பணியாற்றினார்.
சுதந்திரப் போராட்டத்தின் சிப்பாய் என்று அழைக்கப்பட்ட இவர் 1950 ஆம் ஆண்டு தனது 75 ஆவது வயதில் மறைந்தார். இவரது மறைவுக்குப் பிறகு 1991 ஆம் ஆண்டு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. இவரது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின் பிறந்த நாளான அக்டோபர் 31 ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் தேசிய ஒற்றுமை தினமாக மத்திய அரசு அனுசரித்து வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
AFG vs ENG: கடைசி வரை போராடிய இங்கிலாந்து… கடைசியில் திரில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான்
February 26, 2025
ஈஷாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா! காலை 6 மணி வரை தியானம்!
February 26, 2025
மத கஜ ராஜா வசூலை மொத்தமாக எரித்த டிராகன்! 5 நாட்களில் இவ்வளவு வசூலா?
February 26, 2025