சுதந்திரப் போராட்ட வீரர் வினோபா பாவே பிறந்த தினம் இன்று…!

Default Image

சுதந்திரப் போராட்ட வீரர் வினோபா பாவே பிறந்த தினம் வரலாற்றில் இன்று கொண்டாடப்படுகிறது.

1895 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள கைக்கோடா எனும் கிராமத்தில் பிறந்தவர் தான் வினோபாபாவே. இவர் சுதந்திரப் போராட்ட வீரரும், பூமிதான இயக்கத்தின் தந்தையும் ஆவார். இவர் மகாராஷ்டிரா தர்மா எனும் மாத இதழை 1903 ஆம் ஆண்டு தொடங்கியுள்ளார். கதராடை, கிராமத்தில் தீண்டாமை, கிராம மக்களின் கல்வி, சுதந்திரம், மேம்பாடு ஆகியவற்றிற்கு பாடுபட்டவர். பூதான் எனும் பூமிதான இயக்கத்தை தொடங்கிய இவர், பூமிதான இயக்கத்தின் தந்தை எனவும் அழைக்கப்படுகிறார்.

13 ஆண்டுகள் நாடு முழுவதும் உள்ள பல்லாயிரக்கணக்கான இடங்களுக்கு நடைபயணம் மேற்கொண்ட இவர், 40 லட்சம் ஏக்கர் நிலத்தைத் தானமாகப் பெற்று உள்ளார். மேலும் பசுவதை தடை சட்டத்தை கொண்டு வருவதற்காக 1979 ஆம் ஆண்டு உண்ணாவிரதம் இருந்துள்ளார். காந்தியத்தை சிறப்பாக உள்வாங்கிக் கொண்டவர் என காந்திஜியால் புகழாரம் சூட்டப்பட்ட இவர், மக்களாலும் ஆச்சாரியா என்று போற்றப்பட்டுள்ளார். வினோபா பாவே தனது 87 வது வயதில் 1982 ஆம் ஆண்டு மறைந்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்