இன்று விடுதலை போராட்ட வீரர் பி.கக்கன் பிறந்தநாள்…!
இன்று விடுதலை போராட்ட வீரர் பி.கக்கன் பிறந்தநாள்.
பி.கக்கன் அவர்கள் விடுதலைப் போராட்ட வீரர் மட்டுமல்லாது, இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் என பல பொறுப்புகளை வகித்தவர் ஆவார். இவர் ஜூன் மாதம் 18-ஆம் தேதி 1908 ஆம் ஆண்டு, சென்னையில், தும்பைப்பட்டி மேலூரில் பிறந்தார்.
இவர்,பொதுப்பணித்துறை, பழங்குடியினர் நலத்துறை, விவசாயத்துறை அமைச்சர், மாநில உள்துறை அமைச்சர் ஆகிய துறைகளின் அமைச்சராகப் பதவி வகித்துள்ளார். இவர் அமைச்சராக இருந்த காலக்கட்டத்தில் அணைகள், இரண்டு விவசாயப் பல்கலைக்கழகங்கள் கட்டப்பட்டன.
இதனையடுத்து, இந்திய அரசு, இவரின் பணிகளைப் பாராட்டி, இவரின் உருவப்படம் பொறித்த சிறப்பு அஞ்சல் தலையை 1999ஆம் ஆண்டு வெளியிட்டு கௌரவப்படுத்தியது.
1981ம் ஆண்டு அக்டோபர் மாதம் உடல்நலக் குறைவால் சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சில நாளில் நினைவிழந்த கக்கன், நினைவு திரும்பாமலேயே 1981 டிசம்பர் 23 ஆம் நாள் இறந்தார்.