சுதந்திர போராட்ட வீரர் கொடி காத்த குமரன் அவர்களின் பிறந்ததினம் இன்று….!

சுதந்திர போராட்ட வீரர் கொடி காத்த குமரன் அவர்களின் பிறந்ததினம் இன்று கொண்டாடப்படுகிறது.
1904 ஆம் ஆண்டு அக்டோபர் நான்காம் தேதி ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதியில் பிறந்தவர் தான் திருப்பூர் குமரன். இந்திய விடுதலைப் போராட்ட வீரர், கொடிகாத்த குமரன் என அழைக்கப்படும் இவர் இளம் வயதிலேயே நாட்டுபற்று மிக்கவராகத் திகழ்ந்துள்ளார்.
திருப்பூரில் நடந்த போராட்டங்கள் அனைத்திலும் கலந்துகொண்ட திருப்பூர் குமரன் பல போராட்டங்களை தலைமையேற்று நடத்தியுள்ளார். அதன் பின் 1932 ஆம் ஆண்டு காந்தியடிகளின் சட்ட மறுப்பு இயக்கத்திற்கு ஆதரவாக நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டார். இது தான் இவரது கடைசி போராட்டம்.
இந்த போராட்டத்தின் பொழுது காவலர்கள் நடத்திய தடியடி மற்றும் துப்பாக்கி குண்டு தாக்குதலின் போதும் வந்தே மாதரம், வந்தே மாதரம் என்று முழங்கியவர் திருப்பூர் குமரன். மேலும் தனது இறுதி மூச்சுவரை தேசியக் கொடியை கையில் ஏந்தியவாறு 1932 ஆம் ஆண்டு ஜனவரி 11ஆம் தேதி உயிரிழந்தார். இவரது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : மும்மொழி விவகாரம் முதல்…மகா சிவராத்திரி கொண்டாட்டங்கள் வரை!
February 27, 2025
“என்னைய சமாளிக்க முடியல., அந்த பொம்பளைய கூப்டு வராங்க..” சீமான் ஆவேசம்!
February 27, 2025
விஜயலட்சுமி வழக்கில் கிழிக்கப்பட்ட போலீஸ் சம்மன்? களோபரமான சீமான் வீடு!
February 27, 2025
நாளை சென்னை உட்பட 11 மாவட்டங்களில் கனமழை – வானிலை மையம் கணிப்பு!
February 27, 2025