சுதந்திரப் போராட்ட வீராங்கனை துர்காவதி தேவி பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
1907 ஆம் ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத் பகுதியில் பிறந்தவர் தான் துர்காவதி தேவி. இந்திய விடுதலைப் புரட்சி இயக்கத்தை சேர்ந்த பகவதி சரண் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவர், மிகவும் செயல் துடிப்போடு விடுதலை போராட்ட வீராங்கனையாக திகழ்ந்துள்ளார்.
தன் கணவருடன் இணைந்து தங்களுக்கு கிடைத்த செல்வத்தை விடுதலைப் போராட்டத்துக்காக செலவழித்த இவர் லாலா லஜபதி ராயின் மரணத்திற்கு பழி வாங்குவதற்காக கட்சி கூட்டம் ஒன்றையும் நடத்தியுள்ளார். லாலா லஜபதி ராயின் மரணத்திற்கு காரணமான காவல்துறை அதிகாரி ஸ்காட் என்பவரை கொலை செய்ய முடிவு எடுத்து, முதலில் தானே இந்த பணியை மேற்கொள்வதற்கு தேவி முன் வந்துள்ளார்.
ஆனால் இறுதியாக பகத்சிங் மற்றும் சுகதேவியிடம் இந்த பணி ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதன்பின் 1940 ஆம் ஆண்டு தனது கணவர் மறைந்து விடவே லக்னோவில் ஏழைக் குழந்தைகளுக்கான ஒரு பள்ளி கூடத்தையும் இவர் தொடங்கி வைத்துள்ளார். இந்திய அக்னி என போற்றப்பட்ட சுதந்திரப் போராட்ட வீராங்கனை துர்காவதி தேவி 1999ஆம் ஆண்டு தனது 92 வது வயதில் மறைந்தார். இவரது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…