விடுதலைப் போராட்ட வீரர் பகத் சிங் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
1907 ஆம் ஆண்டு செப்டம்பர் 28-ஆம் தேதி பாகிஸ்தானில் உள்ள பங்கா என்னும் கிராமத்தில் பிறந்தவர் தான் பகத்சிங். இவர் சிறு வயதிலேயே கோதுமை வயலில் துப்பாக்கி விளைய வைத்து வெள்ளையர்களை வேட்டையாட வேண்டும் என அடிக்கடி கூறுவாராம். அவருக்கு 12 வயது இருக்கும் பொழுது ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்தது. மேலும், 1928-ம் ஆண்டு சைமன் குழு இந்தியா வருவதை எதிர்த்து பஞ்சாப் சிங்கம் லாலா லஜபதிராய் அவர்கள் அமைதிப் பேரணி நடத்தினார்.
இந்த பேரணியில் பகத்சிங் கலந்து கொண்டுள்ளார். புரட்சி ஓங்குக எனும் சொல்லை தனது தாரக மந்திரமாக கொண்டிருந்த இவர், போராட்டங்களில் கலந்து கொண்டதன் மூலமாக சிறை சென்றுள்ளார். அப்பொழுது துப்பாக்கியும் புத்தகங்களும் இவரது நெருங்கிய நண்பர்களாக இருந்துள்ளது.
சிறையில் இருந்த போதே பல நூல்களைப் படித்த இவர் சில நூல்களையும் எழுதியுள்ளார். இளைஞர்களுக்கு ஊக்கம் அளித்து விடுதலை போராட்ட இயக்கத்தில் பங்கு பெற செய்த இளம் மாவீரன் பகத் சிங், ஆங்கிலேயர்களை எதிர்த்து பல பிராணிகளில் கலந்து கொண்டுள்ளார். இந்நிலையில், சிறை கைதிகளுக்கு சம உரிமை கோரி உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டதால் லாலா லஜபதிராய் உயிரிழந்துள்ளார்.
அவரது மரணத்திற்கு காரணமாயிருந்த காவலர் ஒருவரை பகத்சிங் சுட்டு கொன்றுள்ளார். இந்த குற்றத்துக்காக தனது 24 வது வயதில் 1931 ஆம் ஆண்டு ஆங்கில அரசால் தூக்கிலிடப்பட்டார். விடுதலைப் போராட்ட வீரரும், புரட்சியாளருமான பகத் சிங்கின் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
டெல்லி : டெல்லியில் நடைபெற்று முடிந்த 70 சட்டப்பேரவை தேர்தலுக்கான முடிவுகள் வெளியாகி வருகின்றன. இதில் 2013 (54 நாட்கள்…
கேரளா : நடிகரும் இயக்குனருமான பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன் லால், டொவினோ தாமஸ் உள்ளிட்டோர் நடிக்கும் ‘எம்புரான்' படத்தின் கதாபாத்திரங்களை…
டெல்லி : கடந்த பிப்ரவரி 5-ல் நடைபெற்ற டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. காலை முதலே…
ஈரோடு : கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பெறப்பட்ட வாக்குகள் இன்று காலை…
ஷார்ஜா : இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி…
ஜோகன்னஸ்பேர்க் : ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளரும், தற்போதைய மும்பை கேப் டவுன் அணியின் கேப்டனுமான ரஷீத் கான், நெட்ஃபிளிக்ஸில் ஒளிபரப்பப்படும்…