இன்று காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தியின் பிறந்தநாள்….!

Default Image

இன்று காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தியின் பிறந்தநாள்.

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரும், விடுதலைப் போராட்ட வீரருமான ஜவஹர்லால் நேருவின் குடும்பத்தில் பிறந்த, சோனியா காந்தியின் மகன் தான் ராகுல் காந்தி. தற்போது இவர் பாராளுமன்ற உறுப்பினராக பணியாற்றி வருகிறார். இவர் இன்று தனது 51-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

பிறப்பு

ராகுல் காந்தி அவர்கள் 1970-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 19ஆம் தேதி இந்தியாவின் தலைநகரான புதுடெல்லியில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்திக்கும், தற்போதைய காங்கிரஸின் தலைவராக இருக்கும் சோனியா காந்திக்கும் மகனாகப் பிறந்தார். இவர் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரும் விடுதலைப் போராட்ட வீரருமான ஜவஹர்லால் நேருவின் கொள்ளுப் பேரனும், இந்திரா காந்தியின் பேரனும் ஆவார்.

கல்வி

ராகுல் காந்தி தனது ஆரம்பக் கல்வியை புது டெல்லி மாடர்ன் பள்ளி மற்றும் டூன் பள்ளியில் தொடங்கினார். பின் தந்தை ராஜீவ் காந்தி மற்றும் இந்திரா காந்தியின் படுகொலைக்கு பின் பாதுகாப்பு காரணங்கள் கருதி வீட்ட லிருந்தே படிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார். 1989 ஆம் ஆண்டில் புதுதில்லியில் உள்ள இஸ்டீபன் கல்லூரியில் தனது இளங்கலைப்பட்டத்திற்காக சேர்ந்த இவர், தனது முதலாமாண்டு தேர்வுகளை முடித்த பிறகு ஹார்வர்டு பலக்லைக்கழகத்தில் படிப்பைத் தொடரச் சென்றார்.

அதன்பின்,ஐக்கிய அமெரிக்க நாடுகளில் புளோரிடாவில் உள்ள ரோலின்சு கல்லூரியில் தனது கல்வியைத் தொடர்ந்து 1994-ஆம் ஆண்டில் தனது இளங்கலைப் பட்டத்தைப் பெற்றார். பின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கல்லூரியில் சேர்ந்து எம்பில் பட்டம் பெற்றார்

அரசியல்

2003-ஆம் ஆண்டிலிருந்து தனது தாயாரான சோனியா காந்தியுடன் பொது நிகழ்வுகளில் கலந்து கொண்டார். 2004ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி தனது அரசியல் வருகை குறித்து அறிவித்தார். 2004 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் தனது தந்தையின் தொகுதியான உத்தரப் பிரதேச மாநிலம், அமேதியில் போட்டியிடுவதாக அறிவித்தார். இந்த தேர்தலில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, இந்திய பாராளுமன்ற உறுப்பினர் ஆனார்.

தேர்தல் சமயங்களில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். 2007 ஆம் ஆண்டு செப்டம்பர் 24-ஆம் தேதி அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றார். அதுமட்டுமல்லாமல் இளைஞர் காங்கிரஸ் அமைப்பிற்கும், இந்திய தேசிய காங்கிரஸ் அமைப்பிற்கும் பொதுச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டார்.

2009 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட நபரை 3,33,000 க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வென்று மீண்டும் அமேதி தொகுதியிலிருந்து தேர்ந்து எடுக்கப்பட்டார். இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி உத்திரப்பிரதேச மாநிலத்தில் மொத்தமுள்ள 80 தொகுதிகளில் 21 தொகுதிகளை கைப்பற்றியது. இந்த வெற்றிக்கு முழுமையான காரணம் ராகுல் காந்தியே ஆவார்.

2017 ஆம் ஆண்டு திசம்பர் 16 அன்று துதில்லியில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற எளிமையான விழாவில் இந்தப் பொறுப்பினை ராகுல் காந்தி ஏற்றுக்கொண்டார். பின் இந்தியாவின் 17 ஆவது மக்களவைத் தேர்தலில் காங்கிரசு கட்சிக்கு ஏற்பட்ட தோல்விக்குப் பொறுப்பேற்று காங்கிரசின் தலைவர் பதவியில் இருந்து தான் விலகுவதாக முறைப்படி அறிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்