ஜெகன் மோகன் ரெட்டியின் முழுபெயர் எடுங்குரி சன்டிந்தி ஜெகன் மோகன் ரெட்டி ஆகும்.இவர் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின், தற்போதைய முதல்வரும் ஆவார்.ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்.
இவர் டிசம்பர் 21 ஆம் தேதி , 1972 -ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேசம் மாநிலம், கடப்பா மாவட்டத்தில் உள்ள புலிவந்தலா என்னும் இடத்தில் பிறந்தார். இவரது தந்தை எ.சா. ராஜசேகர் மற்றும் தாயார் எ. ச. விஜயலட்சுமி ஆகியோர்கள் ஆவர். இவரது தந்தை எ. சா. ராஜசேகர் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், இவரது தாய் எ. ச. விஜயலட்சுமி புலிவந்தலா சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினரும் ஆவர். இவருக்கு சர்மிளா என்னும் தங்கை உள்ளார்.
2004 ஆம் ஆண்டு முதல் இந்திய தேசிய காங்கிரசு கட்சியிலிருந்து தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய இவர், தனது தந்தையின் மறைவுக்குப் பின் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் என்னும் கட்சியை 2011-ஆம் ஆண்டு தொடங்கினார். புதிய கட்சிக்கு ஆதரவு திரட்ட 3000 கி.மீ பாதயாத்திரைகளை மேற்கொண்டார்.பின்னர் 2011 ஆம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் கடப்பா மக்களவைத் தொகுதியில் 5,45,671 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேச வேட்பாளர்களைத் தோற்கடித்தார்.
2014 ஆம் ஆண்டில், ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி முதல் தேர்தலை சந்தித்தது. ஆனால், ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி அத்தேர்தல்களில் தோல்வியடைந்தது, மாநில சட்டமன்றத்தில் மொத்தம் 175 இடங்களில் 67 இடங்களை மட்டுமே வென்றது. அப்போது தெலுங்கு தேச கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு முதல்வர் ஆனார். அத்தேர்தலில் தோல்வியடைந்தாலும், எதிர்கட்சி தலைவராக செயல்பட்டார்.பின்னர் 2019 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் மொத்தம் உள்ள 175 தொகுதிகளில், ஒய். எஸ். ஆர் காங்கிரஸ் கட்சி 151 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. இதனால் ஆந்திரப் பிரதேச முதலமைச்சராக மே 30, 2019 அன்று ஜெகன் மோகன் முதலமைச்சராகப் பதவியேற்றார்.இன்று இவருக்கு 47 -வது பிறந்த நாள் ஆகும்…
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலம் நேற்று மற்றும் இன்று என இரண்டு நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. அதில்,…
கோவை : சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை சில பகுதிகள், பெரியதடாகம், பாப்பநாயக்கன்பாளையம். கட்டப்பட்டி, ஆர்.சி.புரம், ஜே.கிருஷ்ணாபுரம், நெகமம், வடசித்தூர்…
புதுச்சேரி : வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் 25.11.2024 முதல் 29.11.2024 வரை கன…
நாகை : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
பெங்களூர் : இது தாங்க டீம் என்கிற வகையில் இப்படி ஒரு டீமுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம் என…
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலத்தின் 2-வது மற்றும் கடைசி நாளான இன்று ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில்,…