கர்நாடக இசை கலைஞர் செம்பை வைத்தியநாத பாகவதர் பிறந்த தினம் இன்று…!

Default Image

கர்நாடக இசை கலைஞர் செம்பை வைத்தியநாத பாகவதர் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. 

1896 ஆம் ஆண்டு செப்டம்பர் 1-ஆம் தேதி கேரள மாநிலத்தில் உள்ள பாலக்காடு பகுதியில் செம்பை எனும் கிராமத்தில் பிறந்தவர் தான் செம்பை வைத்தியநாத பாகவதர். இவர் கர்நாடக இசை உலகில் 70 ஆண்டுகள் புகழ் பெற்றவராக திறந்துள்ளார். தஞ்சை இசை விழா, கரூர் சங்கீத திருவிழா என பல இடங்களில் இவருக்கு கச்சேரி நடத்தக் கூடிய வாய்ப்பு கிடைத்துள்ளது. எனவே இவர் பல இடங்களில் கர்நாடக இசையில் பாடியுள்ளார்.

மேலும் இவருக்கு காயன காந்தர்வ, சங்கீத கலாநிதி, பத்ம பூஷண் ஆகிய விருதுகளும் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சங்கீத உலகில் அழியாத புகழ் பெற்றவராக இருந்த செம்பை வைத்தியநாத பாகவதர் தனது 78-வது வயதில் 1974 ஆம் ஆண்டு மறைந்தார். இவரது நினைவைப் போற்றும் விதமாக 1996 ஆம் ஆண்டு அஞ்சல் தலை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் ஆண்டுதோறும் இசை விழா நடத்தப்பட்டு, அதில் தேர்ந்தெடுக்கப்பட கூடிய கலைஞருக்கு செம்பை விருது வழங்கப்பட்டு வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்