நம் நாட்டின் தேசிய கொடியை வடிவமைத்த பிங்கலி வெங்கையா பிறந்த தினம் வரலாற்றில் இன்று.
1876 ஆம் ஆண்டு ஆகஸ்ட் இரண்டாம் நாள் ஆந்திர மாநிலத்தில் உள்ள மசூலிப்பட்டினத்தில் பிறந்தவர் தான் பிங்கலி வெங்கையா. இவர் தனது மேல்நிலைப் பள்ளி படிப்பை மசூலிப்பட்டணத்தில் படித்துள்ளார். மேலும் கொழும்பிலும் இவர் உயர் கல்வி கற்பதற்காக சென்றுள்ளார். இவர் பல இடங்களில் பணிபுரிந்து, அதன் பின்பு ஆந்திரப் பிரதேசத்தில் வைர சுரங்கம் மற்றும் பருத்தி ஆராய்ச்சியில் சாதனை படைத்துள்ளார்.
எனவே இவர் வைர வெங்கையா மற்றும் பருத்தி வெங்கையா எனவும் அழைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் 1906 ஆம் ஆண்டு நடந்த காங்கிரஸ் மாநாட்டில் ஆங்கிலேயே அரசு யூனியன் ஜாக் கொடி ஏற்றத்தை பார்த்து நமது நாட்டிற்கும் கொடி வடிவமைக்க வேண்டும் என காக்கிநாடாவில் நடந்த இந்திய தேசிய காங்கிரஸ் சந்திப்பின் பொழுது பிங்கலி வெங்கையா வலியுறுத்தியுள்ளார்.
எனவே, நமது தேசத்தந்தை காந்தி அவர்கள் கொடி வடிவமைக்கும் பொறுப்பை இவரிடமே ஒப்படைத்துள்ளார். இதனை அடுத்து பல நாடுகளின் கொடிகளை ஆராய்ச்சி செய்த இவர், சிவப்பு மற்றும் பச்சை நிறங்கள் கொண்ட கொடியை அறிமுகப்படுத்தியுள்ளார். பின் ஜலந்தரை சேர்ந்த ஹன்ஸ்ராஜ் என்பவர் அசோகச் சக்கரத்தை சேர்க்கலாம் என அறிவுரை கூறியது மட்டுமல்லாமல், அமைதியை குறிக்கும் விதமாக வெண்மை நிறத்தை சேர்க்கலாம் என காந்திஜி கூறியுள்ளார்.
எனவே, மூவர்ண தேசியக் கொடியை உருவாக்கி, நடுவில் அசோக சக்கரத்தினையும் சேர்த்து வெங்கையா தேசிய கொடியை வடிவமைத்து உள்ளார். நம் நாட்டின் தேசிய கொடியை வடிவமைத்த பெருமை பிங்கலி வெங்கையாவையே சேரும். நம் நாட்டின் முன்னேற்றத்திற்காகவே தன்னை அர்ப்பணித்த வெங்கையா தனது 86 வது வயதில் 1963 ஆம் ஆண்டு உயிரிழந்துள்ளார். இவர் மறைந்து நாற்பத்தி ஆறு ஆண்டுகளுக்கு பின்னதாக கடந்த 2009 ஆம் ஆண்டு இவரது உருவம் பொறித்த அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.
டெல்லி : ஐபிஎல் 2025 இன் 62வது போட்டி செவ்வாய்க்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு…
இத்தாலி : சினிமாவுக்கு பிரேக் விட்டுள்ள அஜித்குமார், கார் ரேஸில் பங்கேற்று வருகிறார். அவ்வப்போது பேட்டிகளும் கொடுத்து ரசிகர்களை கனெக்ட்டிலே…
டெல்லி : ஐபிஎல் 2025 இன் 62வது போட்டி செவ்வாய்க்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு…
உத்தரகாண்ட் : உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆதி கைலாஷ் யாத்திரை பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டதால் பக்தர்கள், உள்ளுர் மக்கள் 100 பேர்…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீர், அந்நாட்டின் மிக உயர்ந்த ராணுவப் பதவியான ஃபீல்ட் மார்ஷலாக…
டெல்லி : இந்தியன் பிரீமியர் லீக் (ஐபஎல்) 2025 இன் 62வது போட்டியில், இன்று டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி…